குடியுரிமை சட்டத் திருத்தம்: போராட்டத்தில் பலியானவர்களின் குடும்பங்களின் நிலை என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

CAA போராட்டத்தில் பலியானவர்களின் குடும்பங்களின் நிலை என்ன?

மீரட் நகரில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் பலியானவர்களின் உடற்கூராய்வு அறிக்கை, இதுவரை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் நடந்த போராட்டத்தின்போது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற காட்சிகள் வெளியாகி வரும் நிலையில், கூட்டத்தை கலைப்பதற்காக காவலர்கள் வானத்தை நோக்கி மட்டுமே துப்பாக்கியால் சுட்டதாக அந்நகர காவல்துறை உயரதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் காவல்துறையினர் பயன்படுத்தும் துப்பாக்கி குண்டுகள் பலியானவர்களின் உடலில் இருந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் காவல்துறையினர் மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும், நடந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை கூட பதியப்படவில்லை எனவும் பலியானவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: