கொலை செய்து மரத்தில் தூக்கிலிடப்பட்ட 19 வயது தலித் பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொலை செய்யப்பட்டு மரத்தில் தூக்கிலிடப்பட்ட 19 வயது தலித் பெண்; பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

குஜராத்தின் ஹிம்மன்த்நகரில் உள்ள மோடசா கிராமத்தில் 19 வயது தலித் பெண் ஒருவர், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அப்பெண் கோயில் மரத்தில் தூக்கிலிடப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடசா காவல் நிலையம் முன் தலித் சமூகத்தைச் சேர்ந்த பலர் போராட்டம் நடத்தினார்கள்.

பாதிக்கப்பட்ட இளம் பெண் ஜனவரி 1ம் தேதி முதல் காணவில்லை. காணாமல் போன பெண்ணை தேடி கண்டுபிடிப்பதில் காவல் துறையினர் அலட்சியம் காட்டியதாக பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாலியல் வல்லுறவு மற்றும் கொலை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தங்களை கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகுதான் நடந்தது என்ன என்று தெரியவரும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: