செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பை அதிகரித்த இரான்: கட்டுப்படுத்தும் ஐரோப்பிய நாடுகள்

செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பை அதிகரித்த இரான் : கட்டுப்படுத்தும் ஐரோப்பிய நாடுகள் படத்தின் காப்புரிமை EPA

அணு ஆற்றல் உற்பத்தியை குறைத்துக்கொள்ள சர்வதேச நாடுகளுடன் 2015இல் செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக இரான் அறிவித்துள்ளது.

2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் முக்கிய விதிகளை இரான் மீறியதால் , ஐரோப்பிய நாடுகள் பதில் நடவடிக்கை மேற்கொள்ள துவங்கியுள்ளன.

இரானின் அதிகாரம் மிக்க ராணுவ தளபதியான காசெம் சுலேமானீ கொல்லப்பட்ட பிறகு செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பை இரான் அதிகரித்துள்ளது. இதனால் மின்சாரம் தயாரிப்பு மட்டுமல்லாமல் அணு ஆயுதங்களையும் இரான் தயாரிக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் விதமாக ஐரோப்பிய நாடுகள் பதில் நடவடிக்கை மேற்கொள்ள துவங்கியுள்ளன.

இரானுடனான அணு ஒப்பந்தம் தங்களுக்கு சாதகமாக இல்லை என்று கூறி 2018ம் ஆண்டு இந்த அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. அதனை தொடர்ந்து இரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது.

பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் இரான் தரப்பு வாதத்தை கேட்க தயாராக இல்லை.

இந்த அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று இரான் வலியுறுத்தியது. தங்களை முடக்கும் பொருளாதார தடைகளில் இருந்து மீள்வதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இரான் கூறுகிறது.

அணு ஒப்பந்தத்தில் காலவரையின்றி சில தடைகளை மேற்கொள்ளவும், பேலிஸ்டிக் ஏவுகணைகள் உருவாக்குவதை நிறுத்தவும் இரான் ஒப்புக்கொண்டால், இரான் மீது விதித்த பொருளாதார தடைகளை திரும்ப பெறுவதாக அதிபர் டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் இதுவரை இரான் இதை ஏற்க மறுக்கிறது.

இரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளால் அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது, பண மதிப்பும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் இரானின் அதிகாரமிக்க ராணுவ தளபதி கொல்லப்பட்ட பிறகு, வளைகுடா பகுதியில் இரான் நடத்திய பதில் தாக்குதல் என தொடர்வதால் இரான் மற்றும் மேற்கு நாடுகளிடையே பதற்றம் நீடிக்கிறது.

ஐரோப்பிய நாடுகள் கூறுவது என்ன?

பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் பிரிட்டனின் வெளியுறவு துறை அமைச்சர்கள் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்கா இந்த அணு ஒப்பந்தத்தில் இருந்து விலக முடிவு செய்தது வருத்தமளிக்கிறது. இது ஒரு முறையான கூட்டு செயல் திட்டம் என்று வாதிடுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த ஜூலை மாதம் இரான் மேற்கொண்ட நிலைப்பாட்டில் இருந்து அந்நாட்டை மீண்டும் இணக்கத்திற்கு கொண்டுவர ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள 3 ஐரோப்பிய நாடுகளின் அமைச்சர்கள் கடுமையாக முயற்சி செய்தனர். பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் இரானையும் அமெரிக்காவையும் சமாதானம் செய்ய இந்த நாடுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.

இரான் கூறுவது என்ன ?

அணு ஒப்பந்த கூட்டு செயல் திட்டத்தின் சட்டப்பிரிவு 36 பொறுத்தவரை '' குறிப்பிடத்த செயத்திறன் இல்லாதபோது முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒரு நாடு அல்லது ஒரு தரப்பினர் ஒப்பந்தத்தில் இருந்து விளகிக்கொள்ளலாம் என இரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முறையான கூட்டு செயல் திட்டமாக இருந்த அணு ஒப்பந்த விதிகளை அமெரிக்கா மீறியதாகவும், ஐரோப்பிய நாடுகள் வாக்குறுதியளித்த பொருளாதார நன்மைகளை வழங்கத் தவறிவிட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண என்ன வழி ?

பிரிவு 36ன் படி, எந்த தரப்பினர் ஒப்பந்தத்தின் விதிகளை மீறினாலும் மற்றொரு தரப்பினர் விதிமீறல் குறித்து புகார் அளித்து பிரச்சனையை தீர்க்க முற்படலாம்.

பிரான்ஸ் , ஜெர்மன் மற்றும் பிரிட்டன் , ஐரோப்பிய ஒன்றியம் ரஷியா, சீனா மற்றும் இரான் ஆகிய 7 நாடுகளுக்கும் பிரச்சனையை தீர்க்க 15 நாட்கள் அளிக்கப்படும். ஒருமித்த கருத்து நிலவினால் கால அளவு நீட்டிக்கப்படும்.

எந்தவொரு தரப்பினரும் வெளியுறவு அமைச்சர்களிடம் மறு ஆய்வு செய்துகொள்ளலாம், அவர்கள் இந்த பிரச்சனையை மறுபரிசீலனை செய்ய 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.

அதே சமயம், அமைச்சர்களின் மறுஆய்வுக்குப் பதிலாக, ஒரு கட்சி மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவின் கருத்துகளை கோரலாம். ஆலோசனைக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் இல்லை. அந்த கருத்தையும் மறு ஆய்வு செய்து சர்ச்சையை தீர்க்க ஆணையத்திற்கு ஐந்து நாட்கள் வழங்கப்படும்.

இதன் பிறகு இரான் ஒப்பந்த விதிகளுக்கு கட்டுப்படவில்லை என்றால், முன்பு இரான் மீது விதிக்கப்பட்ட அனைத்து தடைகளும் மீண்டும் விதிக்கப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்