மலைவாழ் மக்களுக்கு மருத்துவசதி செய்து தரும் டாக்டர் நெட்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மலைவாழ் மக்களுக்கு மருத்துவ வசதி செய்யும் டாக்டர்நெட் அபிராமி #iamthechange

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்று மற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது.)

சமூக பொருளாதார அடிப்படையில் பின்தங்கியிருக்கும் மலைவாழ் மற்றும் கிராம மக்களுக்கு மருத்துவ சேவைகள் அளிப்பதற்காக 'டாக்டர்நெட் இந்தியா' எனும் தன்னார்வ அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார் அபிராமி அரவிந்தன்.

கோயம்புத்தூரில் வசித்து வரும் அபிராமி, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள கிராமங்களுக்கும், மலைகளுக்கும் சென்று ஏழைகளுக்காக பணிபுரியும் நிறுவனங்கள் அல்லது தனி நபர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். மருத்துவ ஆலோசனை தேவைப்படும் நோயாளிகளை இவர்கள் அறிமுகம் செய்து வைக்கிறார்கள். சிகிச்சை முடியும் வரை, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இவர் செய்கிறார்.

காணொளி தயாரிப்பு: மு.ஹரிஹரன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: