ஜாக்குலின் வில்லியம்ஸ்: சர்வதேச ஆண்கள் கிரிக்கெட்டில் முதல் பெண் மூன்றாம் நடுவர்

இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ஜாக்குலின் வில்லியம்ஸ் சர்வதேச ஆண்கள் கிரிக்கெட் போட்டியின் முதல் பெண் மூன்றாம் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

ஜமைக்காவை சேர்ந்த அவருக்கு வயது 43.

"இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை. இதற்கு முன் நான் ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கு நடுவராக இருந்துள்ளேன். ஆனால் சர்வதேச அளவில் நடுவராக இருப்பது இதுவே முதல்முறை. அதுவும் மேற்கிந்திய தீவுகள் விளையாடும் அணிக்கு நடுவராக இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது."

"சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும், மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் போர்ட்டிற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் பல பெண்கள் நடுவர் பணிக்கு வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்."

Presentational grey line
இந்தியாவின் மிகப்பெரிய முதலை மண அழுத்தத்தால் உயிரிழந்ததா? படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிப்பு படம்

இந்தியாவின் மிகப்பெரிய முதலை மன அழுத்தத்தால் உயிரிழந்ததா? - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை முதலை பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த ஜாவ்ஸ் முதலை கடும் சத்ததிற்கு மத்தியில் வாழ்ந்ததால் மன அழுத்ததில் உயிரிழந்துள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு வருகிறது என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய முதலையான ஜாவ்ஸ் சென்னையில் திங்கள் கிழமை காலை உயிரிழந்து. 500 கிலோ இடைகொண்ட இந்த முதலைக்கு 50 வயதாகிறது. இது குறித்து முதலை பண்ணையில் உள்ள அதிகாரி ஒருவர் கூறுகையில், ''முதலை இறந்ததற்கு வயது ஒரு அடிப்படை காரணமாக உள்ளது. கடந்த சில மாதங்களாகவே வழங்கப்பட்டு வந்த ஆட்டு இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்ட உணவுகள் மீது ஜாவ்ஸ் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அவன் வயதை கடந்து நல்ல உணவு உன்ன தொடங்குவான் என கருதினோம். ஆனால் எதிர்பாராத விதமாக உயிர் பிரிந்தது '' என தெரிவித்தார்.

முதலை பண்ணையின் நிறுவனர் ரோமுலஸ் கூறுகையில், '' உயிரிழந்த முதலையின் உடலை பரிசோதித்து வருகின்றனர். பரிசோதனை முடிவுக்கு பிறகு தான், முதலை இறந்ததன் காரணத்தை உறுதியாக கூறமுடியும். ஆனால் தற்போது இங்கு நிலவும் கடுமையான சத்தத்தால் முதலை மன அழுத்தம் அடைந்திருக்க வாய்ப்புள்ளது.'' என கூறினார்.

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கப்பட்ட பட்டாசுகளின் துகள்கள் மற்றும் குப்பைகள் பல முதலைகளின் பண்ணைக்குள் விழுந்ததாகவும், பட்டாசு சத்தங்கள் முதலைகளுக்கு இடையூறாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும்,"முதலை பண்ணைக்கு வரும் பார்வையாளர்கள், ஜாவ்ஸ் உயிரோடு இருந்தபோது, தங்கள் கையாலேயே உணவு ஊட்டி மகிழ்ந்தனர்'' என்றும் பண்ணையின் உரிமையாளர் ரோமுலஸ் கூறுகிறார்.

தற்போது ஜாவ்ஸ்சின் இடத்திற்கு தோர் என்ற புதிய முதலை அழைத்து வரப்பட்டுள்ளது. இந்த முதலை மிகவும் இளமையானது என்றும் 350 கிலோ இடை கொண்டது என்றும் கூறுகின்றனர்.

Presentational grey line

போிலீசாரின் ம அழுத்தத்தை குறைக்க தர்பார் திரைப்படம் காட்டிய எஸ்.ஐ

தர்பார் திரைப்படம் காட்டிய எஸ்.ஐ படத்தின் காப்புரிமை LYCA

போலீசாரின் டென்ஷனை குறைக்க சிவகங்கை மாவட்ட போலீஸ் எஸ்.ஐ ரோஹித் நாதன், காவல்துறையினரை அவர்கள் குடும்பத்துடன் தியேட்டருக்கு அழைத்து சென்றுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் சிறப்புடன் பணியாற்றிய பல்வேறு காவல் நிலையங்களை சேர்ந்த போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க, அவர்களை குடும்பத்துடன் வாகனங்களில் அழைத்து வந்து ரஜினியின் தர்பார் திரைப்படம் ஓடும் சீனியப்பா தியேட்டரில் திரைப்படம் காண்பித்துள்ளார்.

தியேட்டருக்குள் நுழைந்த காவல்துறையின் குடும்பத்தினருக்கு சந்தனம், குங்குமம், பூ கற்கண்டு வழங்கப்பட்டு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட போலீஸ் எஸ்.பி ரோஹித் நாதன் பதவியேற்றத்தில் இருந்து சிவகங்கை போலீசாருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Presentational grey line

திமுக வில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை : துரை முருகன்

துரைமுருகன் படத்தின் காப்புரிமை Getty Images

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் தொண்டர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் ''திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை. எங்களுக்கு என்ன நஷ்டம்?'' என்று கேள்வியெழுப்பியுளார் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் பதவிகளைப் பகிர்ந்துகொள்வதில் திமுக காங்கிரஸ் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த 10-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், 'உள்ளாட்சித் தேர்தலில் போதிய இடங்களை திமுக வழங்கவில்லை. இது கூட்டணி தர்மத்துக்கு புறம்பானது' எனக் கூறியிருந்தார்.

இதனால் திமுக காங்கிரஸ் இடையே அதிருப்தி நிலவியது.

இது தொடர்பாக பலர் கருத்து தெரிவித்த நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என டி.ஆர்.பாலு நேற்று கூறினார். இந்த சூழலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை. எங்களுக்கு என்ன நஷ்டம்? என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார் என இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்