ஆம் ஆத்மி வெற்றி: பா.ஜ.கவின் பிரியாணி கோஷம் தேர்தலில் எடுபடாதது ஏன்?

பாஜவின் பிரியாணி கோஷம் டெல்லி தேர்தலில் எடுப்படாதது ஏன்? படத்தின் காப்புரிமை Getty Images

"ஷஹீன் பாக்கை சேர்ந்தவர்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து உங்கள் மருமகளை பாலியல் வல்லுறவு செய்துவிடுவார்கள்,"

"பயங்கரவாதிகளுக்கு பிரியாணிகளுக்கு பதிலாக துப்பாக்கி குண்டுகள் வழங்கப்பட வேண்டும்,"

"அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி,"

இது சாதாரண வார்த்தைகள் இல்லை. இந்த வார்த்தைகளைப் பேசிதான் டெல்லி தேர்தலில் சமூக ரீதியாக மக்களைப் பிரிக்க முனைந்தனர்.

இம்மாதிரியான வார்த்தைகளால் பாஜகவின் நட்சத்திர பிரசாரக்காரர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
0
ஆம் ஆத்மி
0
பாஜக
0
மற்றவை
இந்திய தேர்தல் ஆணையம்

பாஜக டெல்லி தேர்தலில் தோற்றதற்கு இது மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா?

பிரதமர் மோதி மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு கெஜ்ரிவால் தடை விதிப்பதாக தெரிவித்திருந்தார். அரவிந்த கேஜ்ரிவாலின் அரசாங்கம் ஆயுஷ்மான் பார்த் திட்டத்தை செயல்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.

பிரவேஷ் வர்மா மற்றும் அனுராக் தாக்கூர் போன்ற தலைவர்கள், `ஷாஹீன் பாக்`, `துரோகிகள்`, `பாகிஸ்தான்` மற்றும் `பயங்கரவாதம்` ஆகிய சொற்களை பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

இந்திய எல்லை எவ்வளவு வலிமையாக உள்ளது என்றும், எதிரிகளின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு உள்ளது என்றும் அமித் ஷா போன்ற தலைவர்கள் பேசி வந்தனர்.

மேலும் இந்தியா பாகிஸ்தானை எவ்வாறு நடுங்க வைத்துள்ளது என்பது குறித்தும் அவர் திரும்ப திரும்ப பேசினார்.

வேலைவாய்ப்பு மற்றும் தூய்மையான நீர், நல்ல சாலை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் பேசப்பட்டது. வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கவும், உறுதிகள் வழங்கப்பட்டன. மேலும் ஏழைகளுக்கு வீடு வழங்கப்படும் எனவும், குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்கப்படும் எனவும் உறுதிகள் அளிக்கப்பட்டன.

`தோற்றுப்போனது பிரித்தாலும் யுக்தி`

இந்த பேச்சுக்களுக்கு மத்தியில் பெரும்பாலும் அனைத்து தலைவர்களின் பேச்சுக்களும் பிரித்தாலும் யுக்தியை மையப்படுத்தியே இருந்தது.

இந்தியர்கள் யார், யாருக்கு தேசப்பற்று உள்ளது, சிஏஏக்கு எதிரானவர்கள் போன்ற பேச்சுக்கள் அதிகமாகக் காணப்பட்டன.

அதேபோல் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள், ரோஹிஞ்சா முஸ்லிம்கள், மேலும், வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக எவ்வாறு இந்தியாவிற்குள் நுழைகிறார்கள், அவர்களைத் திருப்பி அனுப்ப மத்திய அரசு எவ்வாறு நடவடிக்கை எடுத்து வருகிறது, என்று திரும்ப திரும்ப பேசப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும் நம் நாட்டிற்கு என்ஆர்சி மற்றும் சிஏஏ ஏன் தேவை என்பதையும் விளக்கினர். சமூக ஊடகம் முதல் அனைத்து பிரசாரங்கள் முதல் இதே போன்றுதான் பேசப்பட்டது.

டெல்லியில் பாஜகவின் 250 எம்பிக்களையும் களம் இறக்கியது பாஜக. அதுமட்டுமல்லாமல் முதலமைச்சர்கள் மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த மத்திய அமைச்சர்களையும் இரவு பகலாக பிரசாரம் செய்ய வைத்தனர். எம்பிக்கள் குடிசைப்பகுதி இரவு தங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். கேஜ்ரிவாலுக்குக் குடிசைப் பகுதிகளில் அதிக செல்வாக்கை உள்ளது தடுக்கவே இந்த முயற்சி.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மத ரீதியாக பிரித்தாளுதலைப் பயன்படுத்துதல் இது முதல்முறையல்ல.

இதற்கு முன்பு பல சட்டசபை தேர்தல்களிலும் சரி, 2019 பொதுத் தேர்தலிலும் சரி பாஜக தேர்தல் தொடங்கியவுடன் தங்கள் நட்சத்திர பிரசாரக்காரர்களை களமிறக்கிவிடும்.

மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேஷ் போன்ற மாநிலங்களில் பாஜக தோல்வி பெற்றாலும், தேர்தல் பிரசாரங்கள் மற்றும் சமூக ஊடக பிரசாரங்கள் ஆகியவை `மதம் மற்றும் புதிய வகை தேசியவாதம் கொண்டு அமைந்தது` அதுவும் தேர்தலுக்கு கடைசி சில தினங்களில் அது மிகவும் அதிகமாக இருந்தது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த தேர்தலில் பாஜக 70 இடங்களில் வெறும் மூன்று இடங்களில் மட்டுமே பாஜக வென்றது. இந்த முறை சுமார் 6 இடங்களில் வெற்றி பெறும். இந்து பிரித்தாலும் யுக்தியால் கிடைத்த வெற்றி ஆனால் அது ஒரு எல்லைக்குத்தான் ஏனென்றால் தற்போது டெல்லியில் ஆட்சி அமைக்கப்போவது ஆம் ஆத்மி கட்சிதான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: