விசாரணை இன்றி சிறையில் வாடும் காஷ்மீரி இளைஞர்கள் நிலை என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காஷ்மீரி இளைஞர்கள் புகார் ஏதுமின்றி பல மாதங்களாக சிறையில் வாடுவது ஏன்? குடும்பங்கள் வேதனை

கடந்த ஆகஸ்ட் மாதம் மக்கள் பாதுகாப்பு சட்டத்தில் சுமார் 400 காஷ்மீரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணையோ, குற்றச்சாட்டோ இல்லாமல் 2 ஆண்டுகள் வரை ஒருவரை சிறையில் வைக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க இவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய அரசு கூறுகிறது.

கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடம் பேசியது பிபிசி.

என் மகனை சென்று சந்திக்க, நான் சிலரிடம் பணம் கேட்கும் நிலை ஏற்பட்டது எனக் கூறுகிறார் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் தாய் சம்ரூதா. இவர் கடந்த ஆறு மாதங்களாக தன் மகனை பார்க்கவில்லை. அவன் சிறைக்குப் போனதில் இருந்து, என் உலகமே கைவிட்டுப் போனது. எனக் கூறுகிறார் மற்றொருவரின் தாய் அதிகா.

இதில் கைது செய்யப்படுபவர்கள் குற்றவாளிகள் கிடையாது. அவர்கள் வெறும் கைதிகள்தான். அவர்களின் உறவினர்கள் சென்று சந்திக்க, அவர்களது வீட்டின் அருகில் உள்ள சிறையில் இந்த கைதிகளை வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.

அப்போதுதான் அவர்கள் சட்ட உதவியும் பெற முடியும். இந்த சட்டத்தின் கீழ் எவர் ஒருவரையும் கைது செய்வது, நீதித்துறை மூலமாக அல்லாமல் தண்டனை தருகிற செயல்தான் என்கிறார் மனித உரிமை வழக்கறிஞர் பர்வைஸ் இம்ரோஸ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்