டெல்லி வன்முறை வெறியாட்டத்தில் தீக்கிரையான மசூதி - அதிர வைக்கும் படங்களின் தொகுப்பு

டெல்லி வன்முறை

பட மூலாதாரம், Getty Images

வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவானவர்கள் இடையே உண்டான மோதலில் பலி எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.

இந்த வன்முறைகளில் 150க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். வடகிழக்கு டெல்லியின் சாந்த் பாக், பஜன்புரா, பிரிஜ்புரி, கோகுல்புரி மற்றும் ஜாஃப்ராபாத் ஆகிய பகுதிகள் வன்முறை சம்பவங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த வன்முறை சம்பவத்தில் பைக் மற்றும் கார்கள் அதிக எண்ணிக்கையில் தீக்கிரையாகியுள்ளன. அசோக் நகர் பகுதியிலிருந்த மசூதி ஒன்றும் வன்முறையாளர்களால் கொளுத்தப்பட்டது. மசூதியின் குவிமாடத்தில் ஏறிய வன்முறையாளர்கள் அங்கு ஹனுமன் கொடியை சொருகி வைத்தனர். இந்த வீடியோ காட்சிகள் இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

வன்முறை சம்பவங்கள் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தீக்கிரையான வாகனங்களின் எலும்புக்கூடுகள் சாலை எங்கும் கிடக்கின்றன.

வடகிழக்கு டெல்லி வன்முறையின் வீரியத்தை உணர்த்தும் புகைப்படங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

Delhi Riots துவக்கப்புள்ளி எது? எப்படி பரவியது? யார் காரணம்? Delhi Violence Explained | CAA Protest

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: