பிரதமர் நரேந்திர மோதி அறிவிப்பு: “போகாதே... போகாதே”, “வெறுப்பை கைவிடுங்கள்” - நெஞ்சுருகும் ட்விட்டர்வாசிகள்

பட மூலாதாரம், Getty Images
ஃபேஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாகவும், ஞாயிற்றுக்கிழமை இது குறித்து அறிவிப்பதாகவும் பிரதமர் மோதி நேற்று (திங்கட்கிழமை) ட்வீட் செய்து இருந்தார். இதனை அடுத்து இந்திய அளவில் Nosir என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகி உள்ளது.
சமூக ஊடகங்களில் மோதியின் ஆதரவாளர்கள் "போகாதே... போகாதே..." என நெஞ்சுருகி ட்வீட் செய்து வருகிறார்கள்.
பட மூலாதாரம், TWITTER
உங்களால்தான், உங்களுக்காகத்தான் சமூக ஊடகங்களில் கணக்கைத் தொடங்கினேன். நீங்கள் அதிலிருந்து வெளியேறினால், நானும் வெளியேறியதைத் தவிர வேறு வழியில் என பேரன்பால் மோதியை திக்குமுக்காடச் செய்து வருகின்றனர்.
அதே நேரம், மோதியின் அறிவிப்புக்கு எதிர்வினையாற்றி உள்ள ராகுல் காந்தி, "வெறுப்பைக் கைவிடுங்கள், சமூக ஊடக கணக்கை அல்ல," என்று ட்வீட் செய்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
Nosir என்ற ஹேஷ்டாகுகளின் கீழ் மட்டும் 54 ஆயிரம் ட்வீட்டுகள் பகிரப்பட்டுள்ளன.
இது போன்ற எதிர்மறையான பதிவுகளையும் காண முடிகிறது.
பட மூலாதாரம், Buhari/FB
பட மூலாதாரம், காசியார் / Fb
பட மூலாதாரம், TWITTER
பட மூலாதாரம், TWITTER
பட மூலாதாரம், TWITTER
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: