"அஜித் சமூக ஊடகத்தில் இணைவதாக வெளியான கடிதம் போலியானது"

''அஜித் சமூக ஊடகங்களில் இணைய விரும்பவில்லை''

பட மூலாதாரம், AJITH FANS / TWITTER

நடிகர் அஜித்துக்கு அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்குகள் எதுவும் இல்லை என்றும் அவர் சமூக ஊடகங்களில் சேரப்போவதாக சமீபத்தில் வெளியான கடிதம் போலியானது என்றும் அஜித்தின் சட்ட ஆலோசகர்கள் அவர் சார்பில் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று நடிகர் அஜித் சமூக ஊடகங்களில் சேரப்போவதாகக்கூறி, அவரது கையொப்பத்துடன் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட கடிதம் அவரது கவனத்திற்கு வந்ததைத்தொடர்ந்து அவரின் சட்ட ஆலோசகர்கள் மூலம் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், SATHYAJOTHIFILMS/TWITTER

அதில், சமூக ஊடகங்களில் வெளியான அந்த கடிதத்தை நடிகர் அஜித் வெளியிடவில்லை. அந்த போலி கடிதத்தில் இருந்த கருத்துகள் யாவும் மறுக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்துக்கு அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்குகள் எதுவும் இல்லை என்றும் அவரது ரசிகர் பக்கம் என்று எதுவும் இல்லை, அப்படி ஒன்றை அவர் ஆதரிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அவர் எந்த ஒரு சமூக ஊடகத்திலும் இணைய விரும்பவில்லை என தெரிவித்துள்ளதாக அறிவிப்பு கூறுகிறது.

மேலும் அஜித்தின் கையொப்பத்தை மோசடி செய்தவர்கள் யார் என்று கண்டறிய தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சட்டஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: