கொரோனா வைரஸ்: 100 ஆண்டுகளுக்கு முன்பே நோயாளிகளை தனிமைப்படுத்த கட்டப்பட்ட இந்திய மருத்துவமனை

  • தீப்தி பத்னி
  • பிபிசி செய்தியாளர்
100 ஆண்டுகளுக்கு முன்பே நோயாளிகளை தனிப்படுத்த இந்தியாவில் கட்டப்பட்ட மருத்துவமனை

பட மூலாதாரம், Getty images

படக்குறிப்பு,

100 ஆண்டுகளுக்கு முன்பே நோயாளிகளை தனிப்படுத்த இந்தியாவில் கட்டப்பட்ட மருத்துவமனை

குவாரன்டைன் (தனிமைப்படுத்தல்) என்ற சொல் இத்தாலிய மொழியில் தான் முதல் முதலில் உருவானது. இத்தாலியில் குவாரன்டா என்றால் 40. எனவே நோயுற்றவர்களை 40 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்ற பொருளை இத்தாலி மொழியில் குவாரன்டைன் என்ற சொல் உணர்த்துகிறது. வரலாற்றின்படி வெனிஸ் வந்து சேரும் கப்பல்களை 40 நாட்கள் கரையில் நிறுத்தி தனிமைப்படுத்திய பிறகே நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஹைதராபாத்திலும் இந்த சொல் புதிதல்ல. ஹைதராபாத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பே நோயாளிகளை தனிமைப்படுத்தப்படுவதற்காக மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஆனால், இங்குள்ள மக்களால் குவாரன்டைன் என்ற சொல்லை உச்சரிக்க முடியவில்லை. எனவே இந்த மருத்துவமனை கோரந்தி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. கோரந்தி காய்ச்சல் மருத்துவமனைக்கு பின்னணியில் உள்ள கதை என்ன ?

1921ம் ஆண்டு மிஸ்டிரியஸ் இந்தியா என்ற புத்தகத்தில் இந்தியா தன்னை எப்படி பரிசோதனைக்கு உட்படுத்தியது என்பது குறித்து ரோபர்ட் சவ்லோட் எழுதியிருப்பார். ஹைதராபாத்தும் கோல்கொண்டாவும் என்ற தலைப்பில் ரா பர்ட் தனது பயண அனுபவங்களை விவரித்திருப்பார்.

ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியதும் காவல் துறையினர் தன்னை பல்வேறு கேள்விகள் கேட்டு சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இரண்டு முறை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகும் பிளேக் நோய் தொற்று இருக்கிறதா என்பதை பரிசோதிக்க 10 நாட்கள் தொடர்ந்து சிவில் மருத்துவமனைக்கு சென்று செவிலியரிடம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

1915ம் ஆண்டில் பிளேக் நோயால் பலர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தொற்று நோயை ஹைதிராபாத் எப்படி கையாண்டது என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டாகும். பிளேக் பாஸ்போர்ட் என்ற ஒரு பாஸ்போர்ட் பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதையும் இந்த புத்தகம் மூலமாக தெரிந்துகொள்ள முடிகிறது. எனவே 100 ஆண்டுகளுக்கு முன்பே நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் நோய் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.

பட மூலாதாரம், getty images

படக்குறிப்பு,

7வது நிஜாம் மன்னர் - உஸ்மான் அலி கான்

காச நோய், காலரா, சின்னம்மை, பிளேக் போன்ற பெருந்தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தும் மருத்துவமனைகள் 1931ம் ஆண்டு நிசாம் ஆட்சி செய்த காலத்திலேயே இருந்துள்ளது என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. பிறகு காசி நோய்க்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ நிறுவனங்கள் துவங்கப்பட்டதால், தீவிரமான நோய் பாதிப்பு உள்ளவர்கள் இனி தனிமைப்படுத்தப்பட வேண்டாம். மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என நிசாம் ஆட்சி செய்த காலத்தில் 1931ம் ஆண்டு வெளிவந்த அறிக்கை ஓன்று தெரிவிக்கிறது.

நோயாளிகளை தனிமைப்படுத்த மருத்துவமனைகள் - இதன் பொருள் என்ன ?

வர்த்தகத்தாலேயே தொற்று நோய் பாதிப்பும் ஏற்பட்டது. இது குறித்து வரலாற்று அறிஞர் அனுராதா ரெட்டி கூறுகையில், ''வரலாற்றில் எப்போதும் நோய் தொற்று என்பது ஒரு முக்கிய அங்கமாகவே உள்ளது.

வர்த்தகர்கள் சரக்குகளுடன் சேர்த்து எலியையும் இறக்குமதி செய்தனர். முதலில் ஐரோப்பிய நாடுகளிலேயே பிளேக் தொற்று பரவியது. இந்த தொற்று நோயை வெனிஸ் நாட்டை சேர்ந்தவர்களே முதலில் கண்டறிந்து இந்த நோய்க்கு தீர்வாக தனிமைப்படும் முறையையும் கண்டறிந்தனர்.

அதே காலகட்டத்தில் தொற்று நோய் பரவிய நகரங்களில் இருந்து வரும் சரக்கு கப்பல்களை எல்லையில் நிறுத்தி 40 நாட்களுக்கு தனிமைப்படுத்திய பிறகு தான் கரைக்கு வந்த சேர அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறே தனிமைப்படும் முறை இந்தியாவில் கடைபிடிக்க துவங்கப்பட்டது.

மேலும் 1915ல் ஸ்பெயின் ஃப்ளு காய்ச்சல் பரவியபோதும் ஹைதிராபாத்தில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை கூடங்கள் அமைப்பது மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதில் நிஜா ம் ஆட்சியாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர். தீவிர நோய் பாதிப்பை தவிர்ப்பதற்காக எதிர்ப்பு சக்தி உள்ள மக்களுக்கு என சிறப்பான தனிமைப்படுத்தப்படும் கூடங்கள் அமைக்கப்படும் என்றும் வரலாற்றாளர் அனுராதா குறிப்பிடுகிறார்.

1915ல் ஹைதராபாத்தின் எரணாகுட்டா மலைப்பகுதியில் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு தனி இடம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த இடத்திற்கு நேர் எதிரே தான் கோரந்தி காய்ச்சல் மருத்துவமனை உள்ளது. திறந்த வெளியில் சுத்தமான காற்றுக்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பட மூலாதாரம், getty images

படக்குறிப்பு,

100 ஆண்டுகளுக்கு முன்பே நோயாளிகளை தனிமைப்படுத்த இந்தியாவில் கட்டப்பட்ட மருத்துவமனை

இன்றும் இந்த இடங்கள் புறநகர் பகுதிகளாகவே விளங்குகின்றன. டென்ட்டுகள் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பிளேக் தொற்று கண்காணிக்க சிறப்பு ஆணையர் மற்றும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு, நோய் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பெருந்தொற்றை நிசாம் எப்படி கையாண்டார் ?

நிஜாம் ஆட்சி செய்த காலத்தில் வெளிவந்த நிர்வாக அறிக்கைகளின் அடிப்படையில் பிளேக் மற்றும் மலேரியா பரவுவதை கட்டுப்படுத்த ஒரு தனி துறை அமைக்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் பிளேக் தொற்றால் பாதிக்கப்பட்ட எத்தனை பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, அதில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தரவுகள் குறித்தும் நிர்வாக அறிக்கைகள் தெளிவாக விவரிக்கின்றனர்.

தடுப்பூசிகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் தயார்நிலை இருந்த மருத்துவ வசதிகளால் பல ஆண்டுகளாக பிளேக் பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

நிஜாம் காலத்தில் பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரொஜக்டர்கள் மூலம் விழிப்புணர்வு சித்திரங்கள் திரையிடப்பட்டு மக்களுக்கு அடிப்படை சுகாதார அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் சிறந்த பொது சுகாதார கட்டமைப்பை கொண்டது என்று வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். 1908ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு பிறகு 7வது நிசாம் மன்னர் ஹைதிராபாத் நகரத்தை மீண்டும் முறையாக கட்டமைக்க முடிவு செய்தார். அப்போது பூங்கா, கிணறு, வீடு வசதிகள் என அனைத்தும் தேவையான தூரத்தில் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டது. ஒரு நகரத்தை கட்டமைக்கும் போதே தேவையான இடங்களை தவிர்த்துவிட்டு கட்டமைக்க வேண்டும். அதுவே சமூக இடைவெளியை கடைபிடிக்க உதவும் என வரலாற்றாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

கோரந்தி காய்ச்சல் மருத்துவமனையில் கோவிட் 19 வைரஸ் பாதிப்பின் நிலை என்ன ?

இந்த மருத்துவமனையில் பரிசோதனைக்கு தேவையான சாம்பிள்கள் சேகரிக்கப்படுகின்றன. மேலும் கொரோனா பாதிப்பு இருக்குமோ என்று சந்தேகிக்கப்படும் நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அப்படி தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டவுடன் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் வீட்டிற்கு செல்லும்போது தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பதை அடையாளம் காட்டும் விதமாக முத்திரை குத்தப்பட்டு அனுப்பப்படுவார்கள் என தடுப்பு மருந்துகள் நிறுவனத்தின் இயக்குனர் ஷங்கர் கூறுகிறார்.

கோரந்தி மருத்துவமனையில் டெங்கு, மலேரியா, பறவைக்காய்ச்சல், சின்னம்மை, தட்டம்மை என அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த வகையான காய்ச்சல் மற்றும் நோய்கள் அனைத்திற்கும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவது அவசியம் என்பதால், அனைத்து நோய்களுக்கும் தனித்தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன என மருத்துவர் ஷங்கர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: