கொரோனா வைரஸ்: சிறப்பு ரெயில்களில் எவ்வளவு டிக்கெட்டுகள் முன்பதிவாகி இருக்கிறது தெரியுமா? - விரிவான தகவல்கள்

ரயில் நிலையம்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: சிறப்பு ரெயில்களில் எவ்வளவு டிக்கெட்டுகள் முன்பதிவாகி இருக்கிறது தெரியுமா?

ஒரு வார காலத்துக்கு சிறப்பு ரெயில்களில் ரூ.16 கோடி மதிப்புள்ள டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளன. இந்த ரெயில்களில் 82 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்வார்கள்.

சிறப்பு ரெயில்கள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் 22-ந் தேதியில் இருந்து ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. சரக்கு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச்செல்ல கடந்த 1-ந் தேதியில் இருந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, சில குறிப்பிட்ட நகரங்களுக்கிடையே மட்டும் முதல்கட்டமாக நேற்று சிறப்பு ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

இதற்கான டிக்கெட் முன்பதிவு, நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு நடந்தது. ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் மட்டும் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது.

ரூ.16 கோடி டிக்கெட்

இந்நிலையில், ரூ.16 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக இந்திய ரெயில்வே நிர்வாகம் நேற்று தெரிவித்தது. 45 ஆயிரத்து 533 பி.என்.ஆர். எண்களுடன் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த டிக்கெட்டுகளை பயன்படுத்தி, ஒரு வாரத்தில் 82 ஆயிரத்து 317 பேர் சிறப்பு ரெயில்களில் பயணம் செய்வார்கள் என்று ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

8 ரெயில்கள் இயக்கம்

நேற்று 8 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. டெல்லியில் இருந்து திப்ருகர், பெங்களூரு, பிலாஸ்பூர் ஆகிய நகரங்களுக்கும், ஹவுரா, பாட்னாவின் ராஜேந்திர நகர், பெங்களூரு, மும்பை சென்டிரல், ஆமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து டெல்லிக்கும் இந்த ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயில்களில் குளிர்சாதன பெட்டிகள் மட்டும் இணைக்கப்பட்டு இருந்தன.

பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அவற்றை பின்பற்றி பயணிகள் பயணம் செய்தனர்.

தினமணி: இந்திய எல்லைப் பகுதியில் சீன ஹெலிகாப்டா்கள்

இந்தியாவுடனான எல்லைப் பகுதிக்கு அருகே சீனா தனது ஹெலிகாப்டா்களைக் கடந்த வாரம் பறக்கவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை முறையாக வகுக்கப்படாத நிலையில், அங்கு சீன ஹெலிகாப்டா்கள் பறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:

லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியின் வடக்குப் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரா்களிடையே கடந்த 5-ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. அப்போது இருநாட்டு ராணுவ வீரா்களும் மற்றவா்கள் மீது கற்களை வீசித் தாக்கிக் கொண்டனா். அத்தாக்குதலில் இருநாட்டு வீரா்களுக்கும் காயம் ஏற்பட்டது.

அந்தச் சூழலில், சீன ஹெலிகாப்டா்கள் இந்திய-சீன எல்லைப் பகுதியில் பறந்தன. அதற்கு பதிலடி தரும் வகையில் சுகோய்-30 ரக போா் விமானங்களை இந்தியா வானில் பறக்கவிட்டது. அதைத் தொடா்ந்து, இருநாட்டு ராணுவ தளபதிகளிடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு வீரா்களிடையேயான மோதல் முடிவுக்கு வந்தது.

இந்தச் சம்பவத்தையடுத்து, இருநாட்டு எல்லைப் பகுதிகளிலும் வீரா்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாங்காங் ஏரிப் பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு இருநாட்டு வீரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது இதுவே முதல் முறையாகும்.

சிக்கிம் மாநிலத்திலுள்ள இந்திய-சீன எல்லைப் பகுதியிலும் இருநாட்டு ராணுவ வீரா்களுக்கிடையே கடந்த சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. அதில் இருநாட்டு வீரா்களும் காயமடைந்தனா். டோக்கா லாம் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய-சீன ராணுவத்தினா் இடையே எழுந்த மோதலால் தொடா்ந்து 73 நாள்களுக்கு போா்ப் பதற்றம் நிலவியது நினைவுகூரத்தக்கது.

இந்து தமிழ் திசை: ஆரோக்கிய சேது செயலி - முறைகேடாக பயன்படுத்தினால் சிறை

பட மூலாதாரம், Getty Images

ஆரோக்கிய சேது செயலியின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை செயலாளர் அஜய் பிரகாஷ் சாவ்னி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆரோக்கிய சேது செயலியை இதுவரை 9.8 கோடி மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலியை பயன்படுத்தி சுமார் 13,000 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது. மக்களின் அந்தரங்க தகவல்கள் பாதுகாக்கப்படுவது முக்கியம். தனிநபரின் அந்தரங்க தகவல்களை தவறாக பயன்படுத்து வதைத் தடுக்க புதிய விதிமுறைகள் உருவாக் கப்பட்டுள்ளன. இதன்படி, பாதிக்கப்படாத நபர் கள் தங்களைப் பற்றிய தகவலை செயலியில் இருந்து 30 நாட்களில் நீக்க முடியும்.

இதுபோல, பரிசோதனை செய்யப்பட்டவர் கள் 45 நாட்களிலும், சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்ட நபர்கள் 60 நாட்களிலும் தங்களைப் பற்றிய தகவலை இந்த செயலியின் பதிவிலிருந்து நீக்கி விடலாம். மேலும் 6 மாதங்களுக்கு மேல் இந்த செயலியில் தகவல்களை வைத்திருக்க தடை விதிக்கப்படுகிறது.

ஆரோக்கிய சேது செயலியின் தகவல்களை தவறாக பயன்படுத்துவோர் மீது, பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் பிரிவு 51 முதல் 60 வரை மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அபராதம், சிறைத்தண் டனை விதிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: