உம்பான்: கொல்கத்தாவில் அதிதீவிர புயல் ஏற்படுத்திய மோசமான விளைவுகள் என்னென்ன?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Reuters

உம்பான் புயலால் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் குறைந்தது 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இந்த புயல் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

உம்பான் புயலால் கடற்கரை பகுதியில் பெரும் காற்றுடன் கூடிய மழை பெய்தது. மற்றும் அது தற்போது வலுவிழந்து பூட்டான் நோக்கி சென்றது.

கொல்கத்தாவில் பலத்த காற்று வீசியதில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சரிந்தன மேலும் மின் கம்ப இணைப்புகள் மற்றும் டெலிஃபோன் தொடர்புகளும் அறுந்து விழுந்தன. வீட்டின் கூரைகளும் அடித்துச் சென்றன.

கொல்கத்தாவின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. 14 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கொல்கத்தாவில் மின்சாரம் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

1999ஆம் ஆண்டுக்கு பிறகு வங்கக் கடலில் உருவான வலுவான புயலாக இது உள்ளது.

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த போடப்பட்ட தடைகளால் அவசரகால பணிகளும், மீட்புப் பணிகளும் தடைப்பட்டுள்ளன. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மக்களை கும்பலாக அப்புறப்படுத்துவதும், முகாம்களில் கூட்டமாக தங்க வைப்பதும் கடினமாக உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகள், ஒடிஷா, வங்கதேசத்தின் தென் மேற்கு பகுதியில் மணிக்கு 185 கிமீ வேகத்தில் காற்று வீசியது.

வங்கதேசத்தில் 12 பேரும், மேற்கு வங்கத்தில் 72 பேரும் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேற்க வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் கோவிட் 19 -ஐ காட்டிலும் இந்த புயல் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தெரிவித்தார்.

பட மூலாதாரம், SHAKEEL ABDIN

"பல பகுதிகள் மோசமடைந்துள்ளன," என பிடிஐ செய்தி முகமையிடன் மம்தா தெரிவித்துள்ளார்.

மேலும்,"இன்று போர் போன்றதொரு அனுபவம் எனக்கு ஏற்பட்டது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிபிசி பெங்காலி சேவையின் அமிதாபா பட்டாசலி, "கொல்கத்தா மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் ஒரு நாள் முழுக்க மின்சாரம் இல்லை. புயல் மோசமாக தாக்கிய பகுதிகளில் அலைப்பேசி நெட்வொர்க்குகளும் செயல்படவில்லை," என தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் மின்கம்பங்கள் வெடிப்பது போன்ற விடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் போக்குவரத்து சிக்னல் விளக்கு கம்பிகள் அடியோடு சரிந்து விழுவது போன்ற வீடியோக்கள் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. மேலும் மரங்களுக்கு அடியில் பல வாகனங்கள் நொறுங்கியுள்ளன.

"மரங்கள் சரிந்தன, மின்சாரம் நின்றுவிட்டது, மின் கம்பங்கள் சரிந்தன, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன, இணையதள சேவை நின்றுவிட்டது. குழந்தைகள் அலறினர்," என ஷமிக் பாக் என்பவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"எனது வீட்டின் அனைத்து கதவு மற்றும் ஜன்னல்கள் மூடியிருந்தாலும், காற்றின் வேகத்தால் ஜன்னல் கதவுகள் வீரல்விட்டன. 45 நிமிடங்களில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துவிட்டது. பல வீடுகளில் தண்ணீர் புகுந்துவிட்டது," என்கிறார் அவர்.

இந்த புயல் தாக்கியபோது பலர் தங்களின் வீடுகளில் இருந்தனர். மேலும் கொல்கத்தா உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

2007ஆம் ஆண்டு 3500 பேரை பலிகொண்ட மிக சக்திவாந்த புயலுக்கு பிறகு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த புயல் இதுவாக இருக்கலாம் என வங்கதேச அதிகாரிகள் நம்புகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: