இந்தியா - சீனா எல்லை தகராறு: 1962 போர் முதல் 2020 வரை

இந்தியா-சீனா எல்லை தகராறு

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனை அதிகரித்து வருகிறது. கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியில் சீனா தனது ரோந்து படகுகளின் நடமாட்டத்தை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐந்து வாரங்களுக்கு முன்பு இந்த ஏரியின் அருகே இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்தப் பகுதி லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ளது.

சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான ஷாயோ லிஜியன், "தற்போதுள்ள சூழலை மேலும் சிக்கலாக்கும் வகையில், தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் இந்தியா எடுக்க வேண்டாம்," என்று கேட்டுக்கொண்டதற்குப் பின்னர் இத்தகைய செய்திகள் வெளிவந்துள்ளன.

"ராஜீய வழிகளில் இந்தியாவும் சீனாவும் இது குறித்து கலந்தாலோசித்து வருவதாக" மே 21ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாக, சீனாவின் பீப்பிஸ் டெய்லி குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இரு நாடுகளின் ராணுவத்தினர் மோதிக்கொள்வது குறித்த செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன.

1962 இந்திய-சீன போர்

இமய மலையில் சீனாவுடனான எல்லைப் பகுதியில் நடைபெற்ற குறுகியகால, கசப்பான போர் முடிந்து அரை நூற்றாண்டுக்கு அதிகமானபோதும், அந்த அதிர்ச்சி மறக்க முடியாதது. இந்த யுத்தத்தில், இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்ட தோல்வி அரசியல் தோல்வியாகவும் கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

இந்த யுத்தம் பற்றிய வரலாறு ஏற்கனவே மிகவும் விரிவாக எழுதப்பட்டது, எனவே அதைப் பற்றி மீண்டும் எழுத வேண்டிய அவசியமில்லை.

இந்தியா - சீனா இடையே டோக்லாம் சர்ச்சை

2017இல் இரண்டு மாதங்களுக்கும் மேலாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே டோக்லாமில் சர்ச்சைக்குரிய பகுதி தொடர்பாக மோதல் போக்கு நிலவி வந்தது.

சிக்கிம் மற்றும் பூடானுக்கு இடையில் 'சும்பி பள்ளத்தாக்கு' பகுதியில் சீனா அமைக்கும் சாலை, டோக்லாம் மைதானம் என்று அறியப்படும் பகுதி வரை செல்கிறது.

சீனா, பூடான் இரண்டுமே டோக்லாம் பகுதிக்கு உரிமை கோருகின்றன. திபெத் மற்றும் பூடானின் கால்நடை மேய்ப்பாளர்கள், கால்நடைகளை மேய்க்க இந்தப் பகுதியை பயன்படுத்துகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்தியா-சீனா எல்லையில் உள்ள பாங்கோங் த்சோ ஏரி

1950 களில் சீனா திபெத் மீது படையெடுத்து இணைத்தப் பிறகு பூடான் இந்தியாவுடன் பாதுகாப்பு கருதி நட்பானது. அப்போதிருந்து அது இந்தியாவின் ஆதிக்க வளையத்திற்குள் இருக்கிறது.

இந்தியாவை மிரட்டிய சீனா

இமயமலைப் பகுதியில் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா அவமானப்பட வேண்டியிருக்கும் என்று சீன அரசு ஊடகம் அப்போது எச்சரிக்கை விடுத்தது.

டோக்லாம் மோதல் முடிவுக்கு வந்தது எப்படி?

இந்தியாவில் டோக்லாம் என்றும், சீனாவில் தொங்லாங் என்று அறியப்படும் பீடபூமி வழியாக எல்லையில் சாலையை விரிவாக்கும் சீனாவின் முயற்சிக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தபோது மோதல் தொடங்கியது.

இந்தியாவும், சீனாவும் ராஜீய அளவில் பேச்சு நடத்தி படைகளைத் திரும்பப் பெற முடிவு செய்தன.

இந்தியா - நேபாள எல்லை பிரச்சனை

இந்தியா - நேபாளம் இடையே எல்லை தொடர்பான பிரச்சனைகள் நடந்துவரும் சூழலில், இந்த விவகாரம் தலை தூக்கியுள்ளது. இந்தியாவின் சில செய்தி ஊடகங்கள், இந்திய- நேபாள எல்லைப் பிரச்சனை, நாட்டில் (இந்தியா) தற்போது இருக்கும் சில முக்கிய பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்புவதற்கான விவகாரமே என சுட்டிக்காட்டுகின்றன.

இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளும் எல்லை பிரச்சனை தொடர்பாக 1962 ஆம் ஆண்டு போர் ஒன்றை நடத்திய பின்னரும், பல பகுதிகளில் சர்ச்சைகள் நிலவுகின்றன. அவ்வப்போது இந்த இடங்களில் பதற்றங்கள் எழுகின்றன.

இந்தியாவின் 'திட்டமிட்ட நகர்வு'

இரு அண்டை நாடுகளுக்கு இடையே நடக்கும் இந்த எல்லை பிரச்சனை தற்செயலானது இல்லை என்றும், இது இந்தியாவின் 'திட்டமிட்ட நகர்வு' என்றும் கோல்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்திய ராணுவத்தினர் வேண்டுமென்றே, சீன ராணுவத்தினரிடம் இந்த விவகாரத்தை தூண்டி விடுகிறார்கள். இந்தியா, இத்தகைய தூண்டுதல்களை முடிந்தவரை விரைவாக நிறுத்தாவிட்டால், இருதரப்பிற்கும் இடையே உள்ள ராஜீய உறவு கண்டிப்பாகப் பாதிக்கப்படும்," என்று அதன் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

"சீனாவின் பொருளாதார மந்த நிலை" மற்றும் தற்போது உலகம் எதிர்கொள்ளும் சூழலுக்கு, "சீனாவே காரணம் என்று மேற்கத்திய நாடுகள் பழி கூறும்" நிலையும் உள்ளதால், இந்த எல்லைப் பிரச்சனை "இந்தியாவிற்கு சாதகமாக அமைவதற்கான" ஒரு "பெரிய வாய்ப்பாக உள்ளது" என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தியா - சீனா எல்லை பிரச்சனை: செல்பேசி செயலிகளை அழிக்கும் இந்தியர்கள்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தவறியதற்காக சீனாவின் மீது ஏற்கனவே கோபத்தில் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள், தற்போது எல்லைப்பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி அந்த நாடு மீதான தங்களது எதிர்ப்பை திறன்பேசிகளின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

எல்லையில் இருந்து பின்வாங்கும் இருநாட்டு படைகள்

பட மூலாதாரம், ஹல்டன் ஆவணக்காப்பகம்

படக்குறிப்பு,

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் 1962 ஆம் ஆண்டு கசப்பானதொரு போர் நடைபெற்றது.

இந்திய மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இந்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்வேறு நிலைகளில் இருந்தும் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் பின் வாங்கியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமைசெய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய - சீன எல்லையில் ராணுவங்கள் மோதல்: மூன்று இந்திய ராணுவத்தினர் பலி

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே திங்கள் இரவு நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருவரும், ராணுவ அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: