உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரியும்போது இந்தியாவில் சில்லரை விலை உயர்வது ஏன்?
- நிதி ராய்
- பிபிசி வர்த்தக செய்தியாளர்

பட மூலாதாரம், Getty Images
ஒன்பதாவது நாளாக இன்று பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று பெட்ரோல் விலை 48 பைசாவும், டீசல் விலை 23 பைசாவும் அதிகரித்துள்ளது. மொத்தம் 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் டீசலின் விலை லிட்டருக்கு 4.87 ரூபாயும் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையைத் தீர்மானிப்பவை எவை ?
கச்சா எண்ணெய் விலை, எண்ணெயின் சுத்திகரிப்பு செலவினங்கள், சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் லாபம், மத்திய மாநில அரசாங்கங்கள் விதிக்கும் கலால் மற்றும் வாட் வரி ஆகியவற்றைப் பொறுத்தே பெட்ரோல், டீசல் விலை அமையும்.
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து மதிப்புகளின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படும் விலையை தனிமனிதன் விலையாக செலுத்தி பெட்ரோல் அல்லது டீசலைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கலால் வரி என்பது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அரசாங்கம் விதிக்கும் வரி, அந்த வரியை நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.
VAT என்பது மதிப்பு கூட்டு வரி. இது ஒரு பொருளின் மீது உற்பத்தியின் வெவ்வேறு கட்டங்களில் விதிக்கப்படும் வரி. இந்த இரண்டு வரிகளும் அரசாங்கத்தின் முக்கிய நிதி மூலாதாரமாக விளங்குகின்றன.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால் சில்லறை விற்பனை விலை அதிகரிக்கிறது. கடந்த ஜனவரி 30ம் தேதி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 57 டாலர்களாக இருந்தது, இன்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 40 டாலர்களாக உள்ளன. ஆனால் வரி அதிகரிப்பால், தற்போது பெட்ரோல் டீசல் சில்லறை விற்பனை விலை அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விற்கப்படும் விலையில் 70 சதவீதம் வரி மட்டுமே. மேலும் இந்திய பண மதிப்பு அமெரிக்க டாலரை விட உயர்வாக இருந்தால், சில்லறை விற்பனை விலையில் பெரிய தாக்கம் ஏற்படாது.
சமீபமாக பெட்ரோல், டீசல் விலை ஏறத்தாழ எவ்வளவு அதிகரித்துள்ளது?
மார்ச் 14 : பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்ட கலால் வரி லிட்டருக்கு மூன்று ரூபாய் அதிகரித்தது.
மே 6:பெட்ரோல் விலையில் 10ரூபாயும் டீசல் விலையில் 13ரூபாயும் அதிகரித்தது.
ஜூன் 7: பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 60 பைசா அதிகரித்தது.
ஜூன் 8: பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 60 பைசா அதிகரித்தது.
ஜூன் 9: பெட்ரோல் விலையில் 52 பைசாவும் டீசல் விலையில் 55 பைசாவும் அதிகரித்தது.
ஜூன் 10: பெட்ரோல் விலையில் 40 பைசாவும் டீசல் விலையில் 45 பைசாவும் அதிகரித்தது.
ஜூன் 11: பெட்ரோல், டீசல் விலையில் 60 பைசா அதிகரித்தது.
ஜூன் 12: பெட்ரோல் விலையில் 57 பைசாவும், டீசல் விலையில் 59 பைசாவும் அதிகரித்தது.

பட மூலாதாரம், Getty Images
மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் பெட்ரோல் டீசல் விற்பனை மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியுள்ளன. டெல்லியிலும் பெட்ரோல் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி அதிகரித்துள்ளது.
இது குறித்து ஆராய்ச்சியாளர் உர்விஷா ஜகஷித் கூறுகையில், ''பெட்ரோல் விற்பனையில் மட்டும் 254 சதவிகிதம் கலால் மற்றும் மதிப்பு கூட்டு வரியை மத்திய, மாநில அரசாங்கங்கள் வசூலிக்கின்றன. அதேபோல டீசல் விற்பனை மூலம் 240 சதவிகிதம் வரி வசூலிக்கப்படுகிறது'' என்கிறார்.
குறிப்பிட்ட அளவில் வரியில் மாற்றம் செய்தபோதும், ஜூன் 6ம் தேதி வரை பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை அதிகரிக்கவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விற்பனை விலையில் பெரும் சரிவு நிலவியதே இதற்கு காரணம். தற்போது எதிர்பாராத விதமாக 82 நாட்கள் இடைவெளிக்கு பிறகு எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் பெட்ரோல்,டீசல் விலையை அதிகரித்துள்ளன.
ஏன் விலை அதிகரித்துள்ளது?
இந்த கேள்விக்கான பதிலை மிகவும் எளிதாக கூறிவிடலாம். மத்திய மாநில அரசுகள் வருமானத்திற்கு பெட்ரோல் டீசல் விற்பனை மீதான வரியை பெரிதும் நம்பியுள்ளன.
''இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவை குறைந்துள்ளது. நுகர்வும் குறைந்தே காணப்படுகிறது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மூலம் அரசாங்கங்களுக்கு கிடைத்த வருவாயும் முழுமையாக சரிந்துள்ளது'' என்று பிபிசியிடம் பேசிய எரிபொருள் தொடர்பான வல்லுநர் நரேந்திர தனேஜா கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் சரிந்துள்ள நிலையில், ஏரி பொருள் மீதான வரி விதிப்பே அரசாங்கத்தின் பெரும் நிதி ஆதாரமாக உள்ளது. ''ஏரி பொருள் விலை அதிகரித்ததால் சில நன்மைகளும் உள்ளன. இனி போக்குவரத்தில் வீணாக்கப்படும் எரிபொருள் அளவு கட்டுப்படுத்தப்படும். அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் ஏரிபொருள் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாட்டில் இது போன்ற வீணாக்கல்கள் சமாளிக்கப்படக்கூடியதல்ல'' என்கிறார் ஆக்சிஸ் வங்கியின் முதன்மை பொருளாதார நிபுணர் சவ்கதா பட்டாச்சார்யா.
இது இருபுறமும் கூர்மையான கத்தியைப் போன்றது. ஒன்று அரசாங்கம் வருவாயை அதிகரித்துக்கொள்ள வேண்டும் அல்லது பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் பட்டாச்சார்யா.
இந்த விலை உயர்வு பணவீக்கத்திற்கு வழிவகுக்குமா?
கண்டிப்பாக. பெட்ரோல் விலை உயர்வால் வணிகத்தில் மாற்றம் இருக்காது. ஆனால் டீசல் விலை உயர்வால் வணிகம் பாதிக்கப்படும். சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் டீசலைப் பயன்படுத்துகின்றன, இதனால் அதிக விலைகளை செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். நுகர்வோருக்கு அழுத்தம் அதிகரிக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை இரண்டுமே பணவீக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
பொருளாதார நிலைமையை வைத்து பார்க்கும்போது, இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தனிமனிதனின் அன்றாட செலவினங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: