இந்திய - சீன எல்லை மோதல்: தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு

இந்திய - சீன எல்லை மோதல்: தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு

இந்திய - சீன எல்லையான லடாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே திங்கள்கிழமை இரவு நேரிட்ட மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவத்தை சேர்ந்த மூன்று பேரில் தமிழகத்தை சேர்ந்த பழனி என்பவரும் அடக்கம் என்று தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக பழனியின் சகோதரரும் இந்திய ராணுவ வீரருமான இதயக்கனி பிபிசி தமிழிடம் பேசியபோது, "நான் சுமார் 10 நாட்களுக்கு முன்னர் என்னுடைய அண்ணனிடம் பேசியபோது, தான் லடாக்கின் நகர்புறப்பகுதியிலிருந்து எல்லைப்பகுதிக்கு செல்வதாகவும், அங்கு தொலைத்தொடர்பு வசதி இருக்காது என்பதால் திரும்ப அழைப்பதற்கு நாளாகும் என்றும் கூறினார்" என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: