கேரளா விமான விபத்து எப்படி நடந்தது? - டேபிள் டாப் ஓடுபாதை என்றால் என்ன?

கேரளா விமான விபத்து எப்படி நடந்தது? - எளிமையாக விளக்கும் காணொளி

கேரள மாநிலம் கோழிக்கோடில் துபாயில் இருந்து 190 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரு விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விமான விபத்து நடந்த நேரத்தில் பலத்த மழை பெய்துகொண்டிருந்தது மற்றும் புலப்பாடு குறைவாக இருந்தது. தரையிறங்கும் போது விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தாக்கில் விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்தது.

இந்த விபத்து எப்படி நேர்ந்தது? - எளிமையாக விளக்குகிறது இந்த காணொளி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :