புதுச்சேரியில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா பரவல்

கமலக்கண்ணன்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த நபர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது மகன் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஒரே நாளில் சராசரியாக 200-க்கும் மேற்பட்டோர் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 5624ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,355 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், 2,180 சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89ஆக உயர்ந்துள்ளது.

மேலும், "கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த வரும் புதன்கிழமை (ஆகஸ்டு 12) அன்று பேரிடம் துறையிடம் சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு ஏற்பட்டுள்ளது.

அதில், புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

குறிப்பாக, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தனியார் மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்," என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST