சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு

சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 7-ம் கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ளது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. ஆனாலும் பொது மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், நோய் தோற்று தீவிரம் காரணமாகவும் சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. மேலும் வணிக வளாகங்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: