கொரோனா வைரஸ்: வசந்தகுமார் எம்.பிக்கு வென்டிலேட்டர் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை

கொரோனா வைரஸ்: வசந்தகுமார் எம்.பிக்கு வென்டிலேட்டர் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை

பட மூலாதாரம், Facebook/H.Vasanthakumar

கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதால் கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் வசந்தகுமாருக்கு சுவாசக்கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 11ஆம் தேதி வசந்தகுமாருக்கு, கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அவரது மனைவி தமிழ்செல்விக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வசந்தகுமார் எம்.பி.க்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது.

வசந்தகுமார் விரைவில் நலம் பெற வேண்டும் என தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் எனது தந்தை வசந்த குமார் நலமுடன் உள்ளார் என அவரது மகன் விஜய் வசந்த் கூறியுள்ளார்.

வசந்தகுமார் உடல்நிலை குறித்து அவரது உதவியாளரிடம் கேட்ட போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த வசந்தகுமார், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பிறகு, அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வசந்தகுமாருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்படுகிறது" என்று கூறினார்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 1 ஜூன், 2022, பிற்பகல் 2:54 IST