PPE உடை, சானிடைஸர், மாஸ்க் - ஓர் ஆட்டோ ஓட்டுநரின் கூடுதல் முயற்சி

PPE உடை, சானிடைஸர், மாஸ்க் - ஓர் ஆட்டோ ஓட்டுநரின் கூடுதல் முயற்சி

சென்னை வேளச்சேரியை சேர்ந்த இளைஞர் திலிப்குமார். புகைப்பட தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர் பல்வேறு பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இப்போது ஆட்டோ ஓட்டுகிறார்.

பாதுகாப்பு கவச உடையை அணிந்து ஆட்டோ ஓட்டுவதுடன், பயணிகள் ஆட்டோவில் ஏறும் போது சானிடைசர் கொடுக்கிறார்.

பயணிகளிடம் முகக்கவசம் இல்லாவிட்டால் தான் வாங்கி வைத்துள்ள முககவசத்தை அளிப்பது, ஒரு பயணி இறங்கியவுடன், இருக்கையை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வது என கொரோனா கால பாதுகாப்புடன் இருக்கிறார்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: