இந்தியாவின் சீரம் நிறுவன கொரோனா தடுப்பூசி பரிசோதனை எந்த நிலையில் இருக்கிறது?

இந்தியாவின் சீரம் நிறுவன கொரோனா தடுப்பூசி பரிசோதனை எந்த நிலையில் இருக்கிறது?

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துடன் உடன்படிக்கையில் இருக்கும் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரிட்டனில் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் கொரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியுள்ளது குறித்து தங்களால் கருத்து கூற முடியாது என்று தெரிவித்துள்ள புனேவின் சீரம் இன்ஸ்டிட்டியூட், மதிப்பாய்வுக்காக பரிசோதனை இடைநிறுத்தப்பட்டு மீண்டும் விரைவில் தொடங்கப்படலாம் என்றும், இந்தியாவில் நடைபெற்று வரும் பரிசோதனை முயற்சிகளில் இதுவரை எவ்வித பிரச்சனைகளையும் எதிர்கொள்ளாததால் வழக்கம் போல் பரிசோதனை முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: