பாஜக, பாமக போட்டியிடும் தொகுதிகளை அறிவித்தது அதிமுக தலைமை

அதிமுக

பட மூலாதாரம், DIPR

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை போட்டியிடும் தொகுதிகள் எவை என்பதை அதிமுக தலைமை அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக அந்தந்த கட்சிகளின் தலைவர்களுடன் சேர்ந்து கையெழுத்திட்ட தொகுதிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. பாமகவுடனான தொகுதி அறிவிப்பு பட்டியலில் அதன் தலைவர் ராமதாஸும், பாஜகவுடனான தொகுதி அறிவிப்பு பட்டியலில் அக்கட்சியின் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியும் கையெழுத்திட்டுள்ளனர். அதிமுக சார்பில் அதன் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டிருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி (தனி), கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம் (தனி), மதுரை வடக்கு ஆகிய 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), ஆற்காடு, கும்மிடிபூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் மேற்கு, சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் (திண்டுக்கல்) ஆகிய 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இது தவிர, ஏற்கெனவே தமது வேட்பாளர்கள் ஆறு பேரின் பட்டியலை வெளியிட்டிருந்த அதிமுக, இன்று மேலும் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், சேதுராமன், ஜான் பாண்டியன் ஆகியோரின் கட்சிகள் உள்ளன. அவற்றுக்கான தொதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :