தரமில்லாத ரேஷன் அரிசியில் அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு ஆரத்தி எடுத்த பெண்கள்

காணொளிக் குறிப்பு,

'தரம் குறைந்த' ரேஷன் அரிசியில் சோழவந்தான் அதிமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்கள்

சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளரும், தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான மாணிக்கத்துக்கு தரமில்லாத ரேஷன் அரிசியை தட்டில் கொட்டில் அதில் ஆரத்தி எடுத்திருக்கிறார்கள் அலங்காநல்லூர் அருகே உள்ள கிராம மக்கள்.

அலங்காநல்லூர் பகுதியில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி கிடைப்பதில்லை என்று கூறி அதற்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டவே இந்த முறையை அவர்கள் கையாண்டிருக்கிறார்கள்.

அலங்காநல்லூர் ஒன்றியம் தண்டலை அருகே உள்ள செவக்காடு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக சென்றார் மாணிக்கம்.

தங்கள் பகுதி நியாயவிலை கடையில் தரமற்ற ரேஷன் அரிசி வழங்கப்படுவதாக புகார் கூறிய அந்தப் பகுதிப் பெண்கள், அந்த அரிசியை ஆரத்தி தட்டில் கொட்டி, அவருக்கு ஆரத்தி எடுக்க முயற்சி செய்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அதிமுகவினரிடம் பெண்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தரமான ரேஷன் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அதிமுகவினரும் எம்.எல்.ஏவும் பொதுமக்களை சமரசம் செய்து வைத்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :