நந்திகிராமில் வாக்காளர்களை கவர புதிய அவதாரம் எடுத்த மமதா

நந்திகிராமில் வாக்காளர்களை கவர புதிய அவதாரம் எடுத்த மமதா

எதிர்வரும் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியின் வலது கரமாக இருந்த நந்திகிராமின் முன்னாள் எம்எல்ஏ சுபேந்து அதிகாரியைத் தான் மம்தாவிற்கு எதிராக அதே தொகுதியில் நிறுத்துகிறது பாஜக. கிழக்கு மிதினாபூர் மாவட்டத்தில் ஹல்தியா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு பகுதியில், 2007 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்புப் போராட்டத்தின் போது, காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்ட சம்பவம் ஒரே இரவில் சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியானது.

அங்குள்ள தேர்தல் களத்தில் பாஜகவை வீழ்த்த, இந்துத்துவா என்ற ஆயுத்ததை அக்கட்சிக்கு இணையாக உயர்த்திப்பிடித்திருக்கிறார் மமதா பானர்ஜி. அவரது அரசியல் வியூகங்களை அலசுகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :