பெங்களூரு பெண் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பம்

பெங்களூரு பெண் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பம்

பெங்களூரில் ஸொமேட்டோ டெலிவரி ஊழியரால் தாக்கப்பட்டதாகக் கூறி பெண் ஒருவர் மூக்கில் ரத்தம் சொட்டச்சொட்ட புகார் தெரிவித்த "மார்ச் 9" காணொளி சமூக ஊடகங்களில் வைரலான விவகாரத்தில் புதிய திருப்பமாக சம்பந்தப்பட்ட ஊழியர், அந்த பெண் மீது எதிர் புகார் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பெங்களூரு காவல் நிலையத்தில், ஸொமேட்டோ ஊழியர் காமராஜ் தெரிவித்த புகாரில், அந்த பெண் வாடிக்கையாளர் தன்னை மிகவும் இழிவான வார்த்தைகளால் பேசி, காலணிகளை கொண்டு தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முந்தை இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், அதன் சமீபத்திய தகவல்களை தொகுத்து இந்த காணொளியில் வழங்கியிருக்கிறோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :