தமிழ்நாடு, புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது

துறைமுகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

புதுச்சேரி மற்றும் தமிழக துறைமுகங்களில், 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று பகல் குறைந்த காற்றழுத்த மண்டலமாக மாறியுள்ளது என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். இன்னும் 12 மணி நேரத்தில் இது மேலும் வலுவிழந்து வடகிழக்கு திசையில் மியான்மர் கரை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Cuddalore District Adminstration

இதன் காரணமாக சென்னை, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம், தூத்துக்குடி, பாம்பன் ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: