தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 72.78 சதவீதம் வாக்குப் பதிவு: இறுதிக் கணக்கு

சீல் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரம்.
படக்குறிப்பு,

சீல் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரம்.

நேற்று செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 72.78 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர் என்கிறது இறுதியாக வெளியான புள்ளிவிவரம்.

தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹு புதன்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி தமிழ்நாடு முழுவதும் சராசரியாக 72.78 சதவீதம் பேர் வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 74.81 சதவீதம் பேர் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டவாரியான, தொகுதிவாரியான வாக்குப் பதிவு புள்ளிவிவரங்களையும் தலைமைத் தேர்தல் அலுவலர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதம் வாக்குப் பதிவு நடந்துள்ளது. குறைந்தபட்சமாக சென்னையில் 59.06 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

மாவட்ட வாரியான புள்ளிவிவரம்:

பட மூலாதாரம், ECI

படக்குறிப்பு,

மாவட்ட வாரியான வாக்குப்பதிவு சதவீதம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: