சொமேட்டோ ஐபிஓ பங்கு வெளியீடு: முதல் நாளில் அமோக விற்பனை - 10 தகவல்கள்

சொமாட்டோ

பட மூலாதாரம், Getty Images

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோவின் இனிஷியல் பப்ளிக் ஆஃபர் எனப்படும் பங்கு வெளியீடு முதல் நாளிலேயே நல்ல வரவேற்பை பெற்றது.

 • இது பெருந்தொற்று காலத்தில் இணையம் சார்ந்த ஸ்டார்ட் அப் வர்த்தகத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை உணர்த்துகிறது.
 • பங்குச் சந்தையில் கால் பதித்ததை தொடர்ந்து சொமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல், "எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. நாங்கள் வெற்றி பெறுவோமா அல்லது தோல்வியடைவோமா என்பது தெரியவில்லை. இருப்பினும் சிறப்பாக செயல்படுவோம்" என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 • மார்ச் மாத இறுதியில் சுமார் 110மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டம் அடைந்திருந்தது சொமேட்டோ நிறுவனம்.
 • ஜாக் மாவின் ஆன்ட் குழுமத்தின் ஆதரவு பெற்ற சொமேட்டோ நிறுவனம், ஆன்லைன் செயலி மூலம் உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
 • சொமேட்டோ நிறுவனம் இந்தியாவில் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் சுமார் 525 நகரங்களில் 3 லட்சத்து 90 ஆயிரம் உணவகங்களுடன் இணைப்பில் உள்ளது இந்நிறுவனம்.
 • உணவு டெலிவரி மட்டுமல்லாது, உணவகங்கள் குறித்த மக்களின் கருத்தை சேகரித்து உணவகங்களை புக் செய்யும் வசதியையும் வழங்குகிறது.
 • சொமாட்டோவின் போட்டி நிறுவனமாக ஸ்விகி சேவையும், அமேசான் உணவு டெலிவரி சேவையும் உள்ளது.
 • ஐபிஓ மூலம் 76 ரூபாய்க்கு விற்கப்பட்ட சொமேட்டோ நிறுவன பங்குகள், தேசிய பங்குச் சந்தையில் 116 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. இது 52.63 சதவீதம் விலை உயர்வு. இன்றைய வர்த்தக நேர முடிவில், தேசிய பங்குச் சந்தையில் சொமேட்டோ 125.30 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது.
 • அதே போல மும்பை பங்குச் சந்தையில் 115 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டு, வர்த்தக நேர முடிவில் 125.85 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
 • என்.எஸ்.இ சந்தையில் அதிகபட்சமாக 138.90 ரூபாயையும், பி.எஸ்.இ சந்தையில் 138 ரூபாயையும் தொட்டது குறிப்பிடத்தக்கது.
 • தேசிய பங்குச் சந்தையில் சொமேட்டோ நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 98,730 கோடி ரூபாயைக் கடந்திருக்கிறது. இந்திய பங்குச் சந்தைகளில் ஒரு நிறுவனம் ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கடப்பது என்பது ஒரு பெரிய சாதனை. அதை அடுத்த சில நாட்களில் சொமேட்டோ செய்துவிடும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :