கூலி வேலை செய்து 50 ஆண்டுகளாக மது ஒழிப்பு பிரசாரம் செய்யும் காந்தியவாதி கூத்தன் ஐயா

கூலி வேலை செய்து 50 ஆண்டுகளாக மது ஒழிப்பு பிரசாரம் செய்யும் காந்தியவாதி கூத்தன் ஐயா

கூலி வேலை செய்து சம்பாதித்து, 50 ஆண்டுகளாக மது ஒழிப்பு பிரசாரம் செய்யும் காந்தியவாதியான கூத்தன் ஐயா, எப்படி பிரசாரம் செய்கிறார்?

5௦ ஆண்டுகளுக்கு மேலாக கிராமம் கிராமமாக சென்று மது ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார் காந்தியவாதி எஸ்.கே.கூத்தன்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் குட்டிமணிபள்ளியைச் சேர்ந்தவர் கூத்தன். வயது 75. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும் இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

மதுவால் ஏற்படும் உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் கண்ட கூத்தனுக்கு மது ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் சிறு வயதிலேயே தோன்றியது. காந்திய கருத்துகளால் ஈர்க்கப்பட்ட இவர், தனது 20 வயதில் மது ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கினார்.

வெண்ணிற உடையில் தலையில் காங்கிரஸ் குல்லாவும் சட்டைப்பையில் மதுவை ஒழிப்போம் மக்களை காப்போம் என்ற விழிப்புணர்வு வாசகம் பொறித்த பட்டையும் அணிந்தபடி அதிகாலையிலேயே வீட்டை விட்டு சைக்கிளில் கிளம்பி விடுகிறார் இவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :