பிபின் ராவத் மரணம்: இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தகவல்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

பட மூலாதாரம், Sansad TV

இந்திய முப்படைகளின் தளபதியும், முன்னாள் ராணுவ தளபதியுமான பிபின் ராவத் சென்ற விமானப்படை விமானம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று காலை விழுந்து நொறுங்கியது தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் பேசினார்.

மக்களவை, மாநிலங்களவை ஆகிய அவைகளிலும் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.

ராஜ்நாத் உரையின் முக்கிய தகவல்களை 10 புள்ளிகளாக தொகுத்து வழங்குகிறோம்.

  • நேற்று காலை 9 மணியளவில் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பிபின் ராவத் சூலூர் கிளம்பினார்.
  • பிபின் ராவத் சென்ற விமானம் 11:35 மணியளவில் சூலூர் விமானப்படைத் தளத்தில் இறங்கியது.
  • 11: 48 மணிக்கு விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் மூலம் பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து வெலிங்டன் கிளம்பினர்.
  • எம்.ஐ.17வி-5 ஹெலிகாப்டர் உடனான தொடர்பு 12 மணி 8 நிமிடத்திற்கு துண்டித்தது.
  • இந்த ஹெலிகாப்டர் 12:15 மணிக்கு வெலிங்டன் சென்றடைந்து இருக்கவேண்டும்.
  • தரையிறங்குவதற்கு ஏழு நிமிடங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
  • ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதும் அப்பகுதியில் இருந்த உள்ளூர் மக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது உயிருடன் இருந்த சிலரைக் காப்பாற்றும் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
  • விபத்தில் சிக்கிய க்ரூப் கேப்டன் வருண் சிங் உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • இந்திய ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகளை கொண்டு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது தொடர்பாக கூட்டு விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணைக் குழுவினர் நேற்றே குன்னூர் சென்றடைந்துள்ளனர்.
  • முப்படைகளின் மரியாதையுடன் பிபின் ராவத்தின் உடல் நாளை தகனம் செய்யப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :