யுக்ரேனியர்கள் செர்னோபிள் அணு உலையை அழிவில் இருந்தது காத்தது எப்படி?
யுக்ரேனியர்கள் செர்னோபிள் அணு உலையை அழிவில் இருந்தது காத்தது எப்படி?
வடக்கு யுக்ரேனில் உள்ள செர்னோபிள் அணுமின் நிலையம், படையெடுப்பின் முதல் நாளிலேயே ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்டது. தற்போது மீண்டும் யுக்ரேன் கட்டுப்பாட்டிற்கே வந்துள்ளது. பிபிசியின் யோகிதா லிமாயே ரஷ்ய படைகள் வெளியேறிய பிறகு முதல் முதலாக அணுமின் நிலையத்தின் உள்ளே சென்ற செய்தியாளர்களில் ஒருவர்.
பிப்ரவரி 24-ஆம் தேதி பிற்பகலில், ரஷ்ய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் செர்னோபிளை சுற்றி வளைத்து, பெலாரூஸ் எல்லையிலிருந்து யுக்ரேனுக்குள் சுமார் 16 கி.மீ தொலைவில் ரஷ்ய படைகள் நுழைந்திருந்தன.
அணுமின் நிலையத்தைப் பாதுகாத்த சுமார் 170 யுக்ரேனிய தேசிய காவல்படையினர், ஆலையின் அடித்தளத்தில் சிறைபிடிக்கப்பட்டனர். பின்னர் ரஷ்ய வீரர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருக்கின்றனவா என்று வளாகத்தைச் சோதனையிட்டனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்