இந்திய - நேபாள எல்லை பூகம்பத்தில் பலர் பலி

  • 18 செப்டம்பர் 2011
இந்திய - நேபாள எல்லையில் பூகம்பம்

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான சிக்கிம்மை ரிக்டர் மானியில் 6.8 புள்ளிகள் வலுவுள்ள பூகம்பம் ஒன்று தாக்கியிருக்கிறது.

இதில் நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் பலர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இந்த பூகம்பத்தினால் ஏற்பட்ட நில அதிர்வுகள் நேபாளத்தில் பல இடங்களிலும், வங்கதேசத்திலும், பிற இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளன.

இந்தியா நேபாள எல்லைப் பகுதியியில் உள்ள மலைகளில் இந்த பூகம்பத்தின் மையம் அமைந்திருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் சொல்கின்றன.

முழுமையான ஆட்சேதம் பொருட்சேதம் பற்றிய விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதற்கிடையே பூகம்பத்தால் நேபாள தலைநகர் காத்மண்டுவில் பிரிட்டிஷ் தூதரக சுவர் இடிந்து விழுந்ததில் குறைந்தது 3 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

சிக்கிம், பீஹார், காத்மாண்டுவிலும் பலர் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலும், வங்கதேசத் தலைநகர் தாக்காவிலும் நில அதிர்வுகளால் மக்கள் பீதியடைந்ததாக தகவல்கள் வெளியாகின.