சிபிஎம் வரதராஜன் காலமானார்

  • 10 ஏப்ரல் 2012
என் வரதராஜனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது
Image caption என் வரதராஜனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் முன்னாள் தமிழ் மாநிலச் செயலாளருமான என்.வரதராஜன் இன்று காலமானார். அவருக்கு வயது 81.

அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வரதராஜன் சிபிஎம்மின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார்.

மூன்று முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். பழகுவதற்கு இனிமையானவர். தேர்ந்த மேடைப்பேச்சாளர். வரதராஜனின் மறைவிற்குத் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்.