சென்னை இந்தியாவின் மருத்துவ தலைநகரா?

படத்தின் காப்புரிமை AP

தமிழ்நாட்டில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் மிகச்சிறப்பாக இருப்பதால், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நோயாளிகள் தமிழ்நாட்டுக்கு வந்து சிகிச்சை பெற்றுச்செல்வதாக தமிழக முதலமைச்சர் ஜெயலிலிதா தமிழக சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இதனால் இந்தியாவின் சுகாதார தலைநகராக சென்னை அழைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஆனால் அதை மறுத்துப்பேசிய தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டின் தனியார் மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டாலும், அரசு மருத்துவமனைகளும், சுகாதார கட்டமைப்பும் போதுமானதாக இல்லை என்று குற்றம் சாட்டினார்கள். அதனால் தான் தமிழக அமைச்சர்களும் அவர் தம் குடும்பத்தவர்களும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

இந்த இருவேறுபட்ட மதிப்பீடுகளிலுமே ஓரளவு உண்மை நிலை இருப்பதாக கூறுகிறார் பொதுசுகாதார நிபுணர் மருத்துவர் ராக்கால். தமிழக அரசின் மருத்துவ சுகாதார கட்டமைப்பை பொறுத்தவரை ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாக இருந்தாலும், அதற்கடுத்த நிலையில் இருக்கும் தாலூகா, மாவட்ட மற்றும் தலைநகர் அளவிலான சிறப்பு மருத்துவமனைகளின் நிலைமை மோசமாக இருப்பதாக கூறுகிறார் ராக்கால். இது தொடர்பாக அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியின் விரிவான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை