உத்தராகண்ட் வெள்ளத்தில் 30 பேர் பலி

படத்தின் காப்புரிமை PTI

வட இந்தியாவில் பெய்த கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் குறைந்தபட்சம் 30 பேர் பலியாகியுள்ளனர்.

பலர் காணாமல் போயுள்ளதாகவும், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள இந்து வழிபாட்டிடத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் தடைபட்டுள்ளதாகவும் உத்தராகண்ட் மாநில அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வெள்ள ஓட்டத்தில் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், தேசிய நெடுங்சாலை ஒன்றின் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆரம்பமான பலத்த மழையின் காரணமாக அருகே இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலமும் பாதிக்கப்படுள்ளது.

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் சில பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.