பாகிஸ்தானிய இந்துக்களுக்கு ராஜஸ்தானில் தங்க அனுமதி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 நவம்பர், 2012 - 13:17 ஜிஎம்டி
பாகிஸ்தானிலிருந்து வந்துள்ள இந்துக்கள் இந்தியாவில் குடியுரிமை கோருகின்றனர்

பாகிஸ்தானிலிருந்து வந்துள்ள இந்துக்கள் இந்தியாவில் குடியுரிமை கோருகின்றனர்

சொந்த நாடான பாகிஸ்தானிலே அடக்குமுறையையும் அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதாக கூறி இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்துக்கு அடைக்கலம் கோரி வந்துள்ள இந்துக் குடும்பங்களுக்கு அங்கு தங்க அனுமதி கிடைத்துள்ளது.

தற்சமயம் ஜோத்பூர் நகரில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 280க்கும் அதிகமான பாகிஸ்தானிய இந்துக்களுக்கு இந்தியாவில் நெடுநாள் தங்குவதற்கான விசாக்கள் வழங்கப்பட வேண்டும் என ராஜஸ்தான் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

வரைபடத்தில் ஜோத்பூர்

வரைபடத்தில் ஜோத்பூர்

கோயில்களுக்கு யாத்திரை வர வேண்டும் எனக் கோரி விசா பெற்று கடந்த இரண்டு மாத கட்டத்தில் இவர்கள் இந்தியா வந்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடும்போக்குவாதமும் ஆயுதக் கலாச்சாரமும் அதிகரித்து வருவதால் சிறுபான்மை மக்கள் நாட்டை விட்டு வெளியேறிவருவதன் தொடர்ச்சியாகத்தான் இவர்கள் இந்தியா சென்றுள்ளனர் என்று பாகிஸ்தானிய மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.