டெல்லி மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 டிசம்பர், 2012 - 18:59 ஜிஎம்டி
டெல்லியில் தொடர்ந்தும் போராட்டங்கள் நடக்கின்றன.

டெல்லியில் தொடர்ந்தும் போராட்டங்கள் நடக்கின்றன.

டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மாணவி சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்படுவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

பெயர் விபரங்கள் வெளியிடப்படாத அந்த மாணவியின் குடல் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக விமான அம்புலன்ஸ் மூலமாக புதன்கிழமை இரவு அவர் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கும், அவரது பெற்றோருக்கும் இந்திய அரசு விசா பெற்றுக் கொடுத்துள்ளது. ஏற்கனவே அவர் அனுமதிக்கப்பட்டிருந்த புது டெல்லி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் இது குறித்து கருத்துக் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண்ணின் உடல் நிலை சற்று முன்னேறியதாக தகவல் கூறப்பட்டது. அவரிடமிருந்து காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.