வல்லுறவு வழக்கு விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 ஜனவரி, 2013 - 17:01 ஜிஎம்டி
குற்றம்சாட்டப்பட்டவர்கள் கடும் பாதுகாப்போடு நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்படுகின்றன.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் கடும் பாதுகாப்போடு நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்படுகின்றன.

டில்லியில் ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய 5 பேருக்கு எதிரான வழக்கை இந்திய நீதிபதி ஒருவர் விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றியிருக்கிறார்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த அந்த 23 வயதான பெண் பின்னர் இறந்துபோனார்.

இது, இந்தியாவில் பெண்கள் நடத்தப்படும் விதத்தைக் கண்டித்து தேசிய மட்டத்தில் போராட்டங்களுக்கு வழி செய்தது.

இந்த வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமை(21.1.13) ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கில் தொடர்புடைய ஆறாவது சந்தேக நபர் சிறார் நன்னடத்தை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்.

அதிகரித்த ஊடக செய்தி வெளியீடு நியாயமான வழக்கு விசாரணையை பாதிக்கும் என்பதால், இந்த வழக்கை டில்லிக்கு வெளியே மாற்றுமாறு ஒரு சந்தேக நபரின் சார்பிலான வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தை கேட்கப் போவதாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.