தில்லி பாலியல் வல்லுறவு வழக்கு விரைவு நீதிமன்றத்தில் ஆரம்பித்தது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 ஜனவரி, 2013 - 10:23 ஜிஎம்டி
குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றம் அழைத்துவந்த      ற்கான வாகனம்

குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றம் அழைத்துவந்த வாகனம்

இந்தியத் தலைநகர் தில்லியில் சென்ற மாதம் பேருந்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு தாக்கப்பட்டு பின்னர் இறந்து போன மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு ஆரம்பித்துள்ளது.

அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த அவலத்தை அவரே வரவழைத்துக்கொண்டார் என்று பொருள்படுவதுபோல பேசியிருந்த அரசியல்வாதிகளுக்கு அந்தப் பெண்ணின் தாயார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்குலக பெண்களைப் போல ஆடை அணியும், வாழ்க்கை வாழு முயலுவதாக இந்தியப் பெண்களை விமர்சிப்பவர்கள், பாலியல் வல்லுறவை ஆமோதிப்பதற்கு ஒத்த செயலைச் செய்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாணவிக்கு நேர்ந்த கொடுமை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும்கூட மக்களிடையே உணர்வலைகளைத் தோற்றுவித்திருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐந்து பேர், விசேடமாக அமைக்கப்பட்டுள்ள விரைவு நீதிமன்றம் ஒன்றின் முன்னால் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆறாவது நபர், இளம் பிராயத்தாருக்கான நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்கப்படவுள்ளார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.