"என் மகளைக் கொன்றவர்களைத் தூக்கிலிடுங்கள்"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 ஜனவரி, 2013 - 17:37 ஜிஎம்டி
குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும் நடந்துவருகின்றன.

குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும் நடந்துவருகின்றன.

இந்தியத் தலைநகர் தில்லியில் சென்ற மாதம் பேருந்தில் வைத்து பாலியலுறவுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் இறந்துபோன தனது மகளின் சாவுக்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும் என அம்மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

கொலை வழக்கு ஆரம்பித்துள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐந்து பேர் தில்லியில் ஒரு விசேட விரைவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சமயத்தில், அம்மாணவியின் தந்தை பிபிசியிடம் பேசினார்.

தாக்குதலுக்குள்ளான இந்த மாணவி தனது காயங்களால் பின்னர் உயிரிழந்த தருவாயில், தனக்கு கொடுமை இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று விரும்பினார் என அவருடைய தந்தை தெரிவித்துள்ளார்.

பெண்களை ஆண்கள் அடக்கியாளும் நிலையிலிருந்து சமூகம் மாற இந்தியர்கள் அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அநீதியை இனிமேலும் சகித்துக்கொள்ளக் கூடாது என்ற ஒரு செய்தியை இந்தியப் பெண்களுக்கு சொல்லிவிட்டு சென்றுள்ளார் தன் மகள் என்று அவர் குறிப்பிட்டார்.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.