ஊழல் வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வருக்கு 10 ஆண்டு சிறை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 ஜனவரி, 2013 - 10:48 ஜிஎம்டி
ஒம் பிரகாஷ் சவுதாலா

ஒம் பிரகாஷ் சவுதாலா

ஊழல் வழக்கு தொடர்பாக ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஒம் பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரின் மகன் அஜய்க்கு 10 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1999 மற்றும் 2000 மாவது ஆண்டில் 3,206 ஆசிரியர்களை நியமிக்க போலி ஆவணங்களைத் தயாரித்தது தொடர்பாக ஒம் பிரகாஷ் சவுதாலா உள்ளிட்ட 54 பேர்மீது கடந்த வாரம் குற்றம் உறுதி செய்யப்பட்டது.

லஞ்சம் பெற்றுக் கொண்டு உண்மையான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நிராகரிக்கப்பட்டதாக இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மொத்த ஊழல் சுமார் 150 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கலாம் எனறு மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய தேசிய லோக்தள் என்ற கட்சியின் தலைவரான ஒம் பிரகாஷ் சவுதாலா, முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின் மகனாவார்.

செவ்வாய்க்கிழமை நீதிமன்றத் தீர்ப்பு அளிக்கையில், சவுட்டாலாவின் ஆதரவாளர்கள் காவல்துறையுடன் மோதினர். இந்த வழக்கு தொடர்பாக 2008 ஆம் ஆண்டு மத்திய புலனாய்வு நிறுவனமான சி பி ஐ வழக்கு தாக்கல் செய்திருந்தது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.