'விஸ்வரூபம் திரைப்படத்துக்கு இருவாரத் தடை'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 ஜனவரி, 2013 - 16:31 ஜிஎம்டி

சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி தமிழக அரசு நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டிற்கு இருவாரத்தடை விதித்திருக்கிறது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

திரைப்படம் இஸ்லாமியரை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகக் குறைகூறி பல்வேறு முஸ்லீம் அமைப்புக்கள் விஸ்வரூபத்திற்குத் தடை விதிக்கவேண்டுமெனக் கோரிவரும் வேளையில் இந்த இருவாரத்தடை ஆணை வெளியிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

மாநில உள்துறை செயலர் அத்தகைய ஆணை வெளியிட்டுவிட்டதாகவும், அவ்வாணை அனைத்து திரையரங்குகளுக்கும் நாளை அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாளை மறுநாள் ஜனவரி 25 அன்று விஸ்வரூபம் வெளியிடுவப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.