பாலியல் வல்லுறவு வழக்கு விசாரணை தொடங்கியது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 பிப்ரவரி, 2013 - 09:49 ஜிஎம்டி
பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்

பாலியல் வல்லுறவு வழக்கு விசாரணை தொடங்கியது

இந்தியாவின் தலைநகர் டில்லி அருகே நடந்த கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கில், இன்று விசாரணை தொடங்கியது. அரசு தரப்பு சாட்சியாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மாணவியின் நண்பர் சாட்சியமளிக்கத் தொடங்கினார்.


இவர் டிசம்பர் மாதத்தில் அந்தப் பேருந்தில் நடந்த சம்பவத்தின் போது, கடுமையாகத் தாக்கப்பட்டார்.
ஒரு சக்கர நாற்காலியில் அவர் கோர்ட்டுக்கு வந்தார்.
இந்த சம்பவம் இந்தியாவெங்கும் பெரும் சீற்ற உணர்வை ஏற்படுத்தி, பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்த தேசிய அளவிலான விவாதத்தைத் தூண்டியது.
குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும், அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும், பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்கள்.
குற்றம் சாட்டப்பட்ட ஆறாவது நபர் சட்டபூர்வ வயதை எட்டாதவர் என்பதால், அவர் தனியாக சிறார்களுக்கான நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.