ஹிந்திப் பாடகி ஷம்சாத் பேகம் காலமானார்

  • 24 ஏப்ரல் 2013

ஹிந்தி திரைப்படங்களின் ஆரம்பகால பிரபல பின்னணிப் பாடகியாகத் திகழ்ந்த ஷாம்சாத் பேகம் அவர்கள் காலமானார்.

பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த அவருக்கு இறக்கும்போது வயது 94 ஆகும்.

இந்தியா சுதந்திரமடைந்தபோது, 1947 இல் பெஷாவர் வானொலி நிலையத்தினால் ஒலிபரப்பட்ட சுதந்திர கீதத்தை முதன்முதலாக பாடிய பெருமை இவைரையே சாரும்.

70 கள் வரை ஹிந்தி திரைப்பட உலகின் சிறந்த பாடகியாக இவர் திகழ்ந்தார். இவருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது.