பட்டாசு ஆலை விபத்து: மூன்று பேர் கைது

  • 29 ஏப்ரல் 2013
சிவகாசிப் பட்டாசுத் தொழிற்சாலைகளில் தீவிபத்து ஏற்படுவது தொடர்ந்தும் நடந்துவருகிறது. முன்னர் தீவிபத்து நடந்த ஆலை ஒன்றின் கோப்புப் படம் இது.
Image caption சிவகாசிப் பட்டாசுத் தொழிற்சாலைகளில் தீவிபத்து ஏற்படுவது தொடர்ந்தும் நடந்துவருகிறது. முன்னர் தீவிபத்து நடந்த ஆலை ஒன்றின் கோப்புப் படம் இது.

சிவகாசி அருகே ஞாயிறன்று நடந்த பட்டாசு ஆலை வெடிவித்து தொடர்பாக காவல்துறையினர் மூவரைக் கைதுசெய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த நாரணபுரத்தில் உள்ள ரத்னா பட்டாசு ஆலையில் நிகழ்ந்த அவ்வெடி விபத்தில் தொழிலாளர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர்,

மூவர் சம்பவ இடத்திலும் மேலும் இருவர் பின்னர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

சட்ட விதிமுறைகளை மீறி மருந்து தயாரித்ததே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது.

இது தொடர்பாக கணக்காளர் ஒருவர் உட்பட 3 பேரைக் காவல்துறையினர் திங்களன்று கைதுசெய்துள்ளனர்.

மேலும், தலைமறைவாக உள்ள உரிமையாளரையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

பட்டாசு ஆலையின் உரிமமும் தற்காலிகமாக ரத்துசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில் நிகழும் மூன்றாவது பட்டாசு ஆலை விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தி குறித்து மேலும்