காணொளி: இந்திய கடற்படை நீர்மூழ்கியில் பெரும் வெடிப்பு

  • 14 ஆகஸ்ட் 2013
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தக் காணொளியில் ஒலி வர்ணனை கிடையாது.

மும்பை நகரத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் நிகழ்ந்துள்ள பெரிய வெடிப்பில் கடற்படையைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறுகிறார்.

ஆனால் மேலதிக விவரம் எதனையும் அவர் வழங்கவில்லை.

டீசல்-மின்சக்தியில் இயங்கும் இந்த நீர்மூழ்கிக் கப்பலில் சிக்குண்டிருப்பதாகக் கருதப்படுபவர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடந்துவருவதாக நம்பப்படுகிறது.

வேறு சிலர் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து தாவிக்குதித்து உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் மணிக்கணக்கில் போராட வேண்டியிருந்தது.

ஐ என் எஸ் சிந்துரக்ஷக் என்ற இந்த நீர் மூழ்கியின் பெரும்பகுதி தற்போது நீருக்கடியில் மூழ்கியுள்ளதாகவும். ஒரு சின்ன பாகம்தான் நீர் மட்டத்துக்கு வெளியே தெரிவதாகவும் இந்திய கடற்படை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Image caption இந்த நீர்மூழ்கி ரஷ்யத் தயாரிப்பு ஆகும்.

ரஷ்யத் தயாரிப்பான இந்த நீர் மூழ்கி இந்த ஆண்டுதான் பழுதுபார்க்கப்பட்டிருந்தது.

இந்த நீர்மூழ்கியில் 2010ஆம் ஆண்டு நடந்த ஒரு வெடிப்புச் சம்பவத்தில் மாலுமி ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

தற்போது நிகழ்ந்திருப்பது ஒரு விபத்தாக இருக்கலாம் என்று இந்திய கடற்படை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனாலும் விசாரணைக் குழு ஒன்றை அவர்கள் அமைத்துள்ளனர்.