மும்பை பாலியல் வல்லுறவு: சந்தேநபர் அனைவரும் பொலிஸ் பிடியில்...

கடைசியாக கைதானவர் பொலிஸ் காவலுக்கு கொண்டுசெல்லப்படுகிறார்.
Image caption கடைசியாக கைதானவர் பொலிஸ் காவலுக்கு கொண்டுசெல்லப்படுகிறார்.

இந்தியாவின் மும்பை நகரில் இளம் பெண் ஊடகவியலாளர் ஒருவர் பலரால் ஒரேநேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பில் சந்தேகநபர்கள் ஐந்து பேருமே தற்சமயம் பிடிபட்டுவிட்டார்கள் என அந்நகர பொலிசார் கூறுகின்றனர்.

மூன்று பேர் ஏற்கனவே பிடிபட்டிருக்க மீதமிருந்த இரண்டு பேர் சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டார்கள் என காவல்துறை சார்பாக பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டு வன்புணர்ச்சி சம்பவம் தொடர்பில் நாடெங்கிலும் மக்கள் மத்தியில் ஆத்திரம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து ஞாயிறன்று கொல்கத்தாவில் பெண்கள் அமைதி ஊர்வலம் ஒன்றை நடத்துகின்றனர்.

இந்தச் செய்தி குறித்து மேலும்