இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் கைது

  • 29 ஆகஸ்ட் 2013
யாசின் பட்கல்
Image caption யாசின் பட்கல்

இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவரை கைது செய்துள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சமீப காலங்களில் நடைபெற்ற பல தொடர் குண்டுவெடிப்புகளுக்கு இந்த அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் தலைவர் யாசின் பட்கல் இந்திய நேபாள எல்லைக்கு அருகே புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாகவும் அவர் தற்போது பிகார் மாநிலத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

சமீப ஆண்டுகளில் புனா, பெங்களூர், ஐதிராபாத் போன்ற இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு இந்த அமைப்பின் மீது பழி போடப்பட்டுள்ளது. இத்தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

யாசின் பட்கால் உடனிருந்த மற்றொரு தீவிரவாதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில்தான் லஷ்கர் ஈ தொய்பா அமைப்பைச் சார்ந்தவர் என்று கூறப்படும் அப்துல் கரிம் துண்டா இந்திய நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டார்.