மாட்டுத் தீவன ஊழல்: லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

லாலு பிரசாத் யாதவ்
Image caption லாலு பிரசாத் யாதவ்

மாட்டுத் தீவன ஊழலில் பிகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

இதே வழக்கில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என 44 பேர் மீது குற்றங்காணப்பட்டுள்ளது.

இவர்களுக்கான தண்டனை வரும் 3 ஆம் தேதி அறிவிக்கப்படும். தீர்ப்பை அடுத்து லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி மத்திய சிறையில் சரணடைந்தார்.

கடந்த 17 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருகிறது. கால்நடைகளுக்கான தீவனம் மற்றும் மருந்துகளை வாங்குவதில் ஊழல் நடைபெற்றதாக மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த தீர்ப்பால் நீண்ட சிறை தண்டனையை எதிர்கொள்ளும் சூழலில் லாலு பிரசாத் யாதவ் உள்ளார்.

சமீபத்தில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அவர் தனது நாடாளுமன்ற இடத்தை இழக்கவும் வேண்டியிருக்கும்.

இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் மேல் முறையீடு செய்வார் என்று அவரின் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.